பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 இங்கு நாம் ஓர் உண்மையை மறந்துவிடக் கூடாது. இந்த நிந்தாஸ்துதிப் பாடல்களின் மூலம். வேதநாயகம் பிள்ளை நிலவசூல் அதிகாரிகளை, அதாவது அரசாங்கத்தின் பிரதிநிதிகளை மறைமுகமாகத் தாக்கியுள்ளார். விளைச்சலற்ற காலத்தில் வரிகளைத் தள்ளுபடி செய்யாமலிருப்பது அ நியா யம் என்பதையும் சொல்லாமற் சொல்லிச் சுட்டிக் காட்டி, யுள்ளார். சுருங்கச் சொன்னால், அரசாங்கத்தின் நிதிவசூல் இலாகாவுக்கு எதிரிடையாகவே பிரசாரம் செய்திருக்கிறார். அவர் அந்த அரசாங்கத்தின்கீழ் பணிபுரிந்து வந்த ஒரு ஜில்லா அதிகாரி என்பதை நாம் மறந்து விடாதிருந்தால், அவரது துணிச்சலையும் மனிதாபிமான உணர்ச்சியின் வெளிப்பாட் டையும் நாம் நன்கு புரிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்ல, அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய புலவர்களுக்கும் அவருக்கும் இருந்த ஒரு வித்தியாசத்தையும் நாம் தெரிந்து, கொள்ளலாம். அவரோ ஒரு அரசாங்க ஜில்லா அதிகாரி; நீதிபதி. அந்தப் பதவியின் மூலம் நல்லதோர் ஊதியத்தை யும் அந்தஸ்தையும் பெற்று வாழ்ந்தவர்; அந்தக் காலத்தில் நிகழ்ந்த பஞ்சத்தினால் பாதிக்கப்படாதவர். ஆனால், அவர் காலத்திய ஏனைய புலவர்கள் பலரும் வறுமைவாய்ப் பட்ட வர்கள்; பஞ்சத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்; எந்த நேரமும் புரவலர்களை நாடி ஆதரவு தேடியவர்கள், எனவே அவர்கள் தான் மக்கள்பட்ட அவதிகளைக் குறித்துப் பெரிதும் பாடியிருக்கவேண்டும். ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத மனிதாபிமான உணர்ச்சியும், சமுதாய உணர்வும் அரசாங்க உத்தியோகத்திலிருந்த வேதநாயகம் பிள்ளையிடம் தான்" காணப்படுகிறது என்பது தான் அந்த உண்மை . அதிலும் அத்தகைய உத்தியோகத்திலிருந்து கொண்டே, அதிகாரிகள் செய்யும் " இழவையும்' 'வம்பையும்' குறித்து அவர் பாடியுள் ளார் என்றால் அவர் நமது மதிப்புக்கும் பாராட்டுக்கும் உரியவர் தானே! தனிப்பாடல்கள் என்று பார்த்தால் தாது வருஷம் பஞ்சம் பற்றிப் பாடியுள்ள தமிழ்ப் புலவர் இவர் ஒருவரே