பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இவ்வாறு' 'மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த படிப் பாரிகளும் புலவர்களும் ஆதரவின்றித் திண்டாடினார்கள். அழகிய சொக்கதாதர் மட்டும் இதற்கு எந்த அளவுக்கு விதிவிலக்காக இருந்திருக்க முடியும்? அவரும்தான் பாதிக்கப் பட்டார். இதனால் அவருக்குப் பணம் படைத்த செல்வர்கள் மீது பொறாமை ஏற்படுகிறது. எப்படி? பணக்காரர்களுக்கென்ன? நிலம் கரைகள் ஏராளம், குனிந்து நிமிராமல் 'விவசாயி' என்ற பெயரோடு, ஏராள மான நிலங்களில் கூலியாட்களைக் கொண்டு பயிரிடச் செய்யலாம், பயிரிட்டுச் சேர்த்த நெல்லை, உழுதவன் வயிற்றில் மண்ணை யடித்துவிட்டுச் சேமித்துவைக்கலாம். உடம்: கொழுத்துப் புடைக்கும்படி உண்டு களிக்கலாம். உண்டது போக மீதமுள்ள நெல்லைக் கொள்ளை லாபத் அதுக்கு விற்கலாம்; விற்றுச் சேர்த்த பணத்தில் இல்லக் கிழத்திக்கும், காதற் கிழத்தியருக்கும் நகைகள் பண்ணிப் போடலாம்; கொஞ்சலாம்; குலாவலாம்! இல்லையா? புல வரது பொறாமையுணர்ச்சி - சொல்லப்போனால், வயிற்றுப் பசியிலே எழுந்த தர்மாவேசக்குரல் - இப்படி எழுந்து ஓவிக்கிறது. செய்கள் உள்ளோர்கள் பயிரிடுவார்; நெல்லைச் சேர்த்து 1 வைப்பார்; மெய் கொழுக்கும். டி உண்டிடுவார்; நெல் மிகுந்ததை விலைகட்கு விற்று, வருடம் தப்பாமல் நகைகள் செய்வார்? கொய் கமழ் பூங்குழலாய்! பஞ்சத்தால் என்ன குறை. அவர்கட்கே! அகவிலை 5 ராகிறது! இவ்வாறு எரிகிற வீட்டில் பிடுங்கியது. லாபம் என்ற எண்ணத்தால், செல்வர்களும், வியாபாரிகளும் நிலச்சு