பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 அசம்என்று உனேகின்ற ஆறுக்கும் கவலையெலாம் திரம் என்று மிக்க பொருள் அளித்தாள், பஞ்சம் தீர்த்தம் வாம்என் 09ம் நீட. அருனினள்; காந்திமதி அம்மையைப் பாம்என்று நம்பின பேர்க்கு ஒருநாளும் பழுது இல்லையே! என்றெல்லாம் பாடித் துதித்து, தமது அந்தாதியை நிறைவு பெறச் செய்கிறார் புலவர் அழகிய சொக்கநா தட்பிள்ளை. முடிவுரை ', 'காந்திமதி அந்தாதியை நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? இந்தூல் பஞ்சத்தின் கொடுமையைப் புலவர் எடுத்து இயம்பியுள்ளது என்பது மட்டும் காரணம். அவ்). சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பலரும் பஞ்சத்தை அனுபவித்த போதிலும், அதனால் நாட்டு மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஏன் டாட', பூன் வரவில்லை? இதற்குரிய விளக்கம் தெரிந்துவிட்டால், காந்திமதி அந்தாதி தமது கவனத்துக்கு உரியதாகும் மற்றொரு காரணமும் புரிந்துவிடும். 18, 19-ம் நூற்றாண்டில் வாழ்த்த தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கையைத் தெரிந்தவர்களுக்கு இஃதொன்றும் புரியாத புதிர் அல்ல. சென்ற நூற்றாண்டுப் புலவர்கள் : பலரும் தமது நூல்களிலே எளிமையையும் இனிமையையும் புதுமையையும் புகுத்தத்தான் செய்தார்கள். என்றாலும். அவர்களில் பெரும்பாலோர் தமது குப்பின் கொதிப்பையும் குடும்ப வாழ்க்கையையும் கவனித்துக் கொள்வதற்காக, நிலப் பிரபுக்களையும் ஜமீன்தார்களை wம், செல்வந்தர்களையும் அண்டிப் பிழைத்து வந்தார்கள். எனவே அவர்கள் மக்களிடமிருந்து விலகி நின்றார்கள். இதன் காரணமாக, அவர்கள் தாம் -அண்டிப் பிழைத்துவந்தி ஆதரவாளர்களைப் புகழ்ந்து பாடுவதிலேயே காலத்தைக் கழித்தார்கள். அந்தப் பிரபுக்களின் சிற்றின்ப வேட்கை யையும் நப்பாசையையும் - திருப்தி செய்யும் விதத்தில்,