பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 துரையை நோக்கிக் கேட்டு, சேரத் துடிப்பதாக வெல்லாம் பாடிப் பரிசில் பெற்றவர்தான்! இதே போல் பச்சைகாரன், கொச்சையான முறையில் பல்வேறு புத சாகித்தியங் களையும் படைத்து விட்டவர் தான் அழகிய சொக்க நாதர்! . உலகம் எப்படி இருக்கிறது? உலக மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? பஞ்சமும் நோயும் சமுதாய வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கின்றன?- என்பனவற்றையே பார்க்க மறந்தவர்களாய், மறுத்தவர்களாய், கண்ணிருந் தும் கண்ணைக் கட்டிக்கொண்டு குருடியாக வாழ்ந்த காத் தாரியைப் போன்றவர்களாய், வாழ்ந்து வந்த புலவர் களில் ஒருவராக இருந்தவர்தான் அழகிய சொக்கநாது பிள்ளை, தமக்கென்று ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டு, அதனுள்ளேயே பிரக்ஞை யிழந்து உறங்கும் பட்டுப் பூச்சிப் புழு மாதிரி வாழ்ந்து வந்த புலவர்களில் ஒருவர் தான் அவர். என்றாலும் அத்தகைய புலவர்களைக்கூட, தா து வருஷப் பஞ்சத்தின் விளைவுகள் எவ்வாறு பாதித்தன் என்பதையே நாம் காதிமதி அந்தாதியில் காண்கின்றோம். தமது . சொந்தச் ச க 3 1.4 எ க த் ன த ய ம், சாண் வயிற்றையுமே சதமென நம்பி, புரவலர்களை அண்டிப் பிழைத்து, ' உலகைப் பற்றிய ஐ. ணர்வோ, பிரக்ஞையோ, பார்வையோ அற்றிருந்த புலவர்களைக்கூ,ட, தாது, வருஷம் கஞ்சம் எவ்வாறு கண்காைப் AF6லவந்தமாகத் திறந்து பார்க்க வைத்தது என்பதையும், அவர்களது சுரணையற்ற நெஞ்சிலே எப்படிச் சமுதாய நிலைமையைப் பற்றிய பிரக்ஞையைச் சூடேற்றி உணர்த்தியது என்பதையும் நமக்குப் புலப்படுத்தும் சாட்சியமாக, காந்திமதி அந்தாதி - விளங்குவதை நாம் கண்டுணர்கிறோம். அத்துடன் தாது, வருஷப் பஞ்சத்தின் தன்மைகள் சிலவற்றையும் அதன் மூலம் தெரிந்து கொள்கிறோம். எனவேதான் காந்திமதி அந்தாதி நமது கவனத்துக்குரிய ஓர் அபூர்வ நாலாகவும், சரித்திர முக்கியத்துவம் கொண்ட ஒரு சமுதாயப் படைப்பாகவும் துமக்குக் காட்சியளிக்கிறது. "வாறு கண் புலவர்களை வா, பிரக் கண்டம்