பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்ச லட்சணம் கூதசு லட்சணம், காந்திமதி அந்தாதியாம் தாது வருஷப் பஞ்சத்தைக் கவிப் பொருளாகக் கொண்டு, முழுவடிவத்தில் ஆக்கப் பெற்ற தமிழ் நூல்கள் பஞ்சலட்சணத் திருமுக விலாசமும், காந்திமதி அந்தாதி யும்தான் என்று முந்தைம். கட்டுரையில் சொன்னோம். ஒரே விஷயத்தைப் பற்றிப் பாட வந்த இவ்விரு நூல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பஞ்சலட்சணத்தைப் பாடிய வீல் லியப்பரிடம் காணக் கிடைக்கின்ற சொல்லாட்சித் திறன், பொருளமைதி, கற்பனை வளம், கவித" சக்தி முதலியன காந்திமதி அந்தாதியைப் பாடிய அழகிய சொக்கநாத பிள்ளையிடம் கிஞ்சித்தும் காணப்படவில்லை. சொல்லப் போனால் வடிவ அமைதி நிரம்பி, அழகோடும் பாவத்தோடும் விளங்கும் பாடல்கள் அந்தாதியில் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. மேலும், அழகிய சொக்கநாத பிள்ளை தமது அந்தாதியில் சிலேடை நயம் மிகுந்த பாடல்களையும், தெய்வங்களின்மீது நிந்தாஸ்துதி பாகப் பாடிய பாடல்களையும் இடம் பெறச் செய்துள்ளா ரெனினும், வில்லி.சப்பரிடம் காணப்படும் அற்புதமான