பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 சிலேடை' நீயங்களுக்கும் நி ந் த ா ஸ் த தி க் கு ம் முன்னிலை யில், அந்தாதியின் சிலேடையும் நிந்தாஸ்துதியும் பூரண மாக ஒளி மங்கி , இருளடித்துப் போய் விடுகின்றன. அழகிய சொக்கநாத பிள்ளை சிவன், திருமால் முதலிய தெய்வங்களை யெல்லாம் நிந்தாஸ்துதியாகப் பாடி, அம்பிகை ஒருத்தியை மட்டுமே நம்பி நிற்கிறார். அதாவது தெய்வத்தின் அருளினாலன்றி மனித எத்தனத்தால் எதுவுமே நடக்காது என்ற கருத்தில் அம்பிகையைச் சரண் புகுந்து விடுகின்றார். வில்லியப்ப பிள்ளையோ பஞ்சத்தைப் போக்கு வதற்குக் கடவுளர்களால் ஏலாது என்பதைச் சோமசுந்தரக் கடவுளின் வாய்மொழியாகவே நிந்தாஸ்துதியாகப் பாடி, 'பஞ்சத்தை மனித எத் தனத்தாலும் ஒத்துழைப்பாலும்தான்: போக்க முடியும் என்றும், அதற்குக் கடவுளின் அருளும் துணை நிற்க வேண்டும் என்றும் நம்புகிறார். எனவேதான் சோமசுந்தரக் கடவுள் தம்மால் பஞ்சத்தைத் தீர்க்க முடியா விட்டாலும், பஞ்சத்தைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும்" உதவியையும் செய்வதற்காக, சிவகங்கை ஜமீன்தாருக்குச் சிபாரிசுக் கடிதம் (திருமுகம்) தர முன்வருவதாக வில்லியப்பர் பாடியுள்ளார், பஞ்சலட்சணம் சிவகங்கை ஜமீன்தாரையே பாட்டுடைத் தலைவராகக் கொண்டிருந்த போதிலும், பஞ்சத் தைப் போக்குவதற்கு மனித எத்தனம் தேவை என்ற உணர் வையும் உறுதியையும் புலப்படுத்துகிறது. மேலும் இவ்விரு நூல்களுக்குமுள்ள இன்னொரு லேற்று மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். வில்லியப்பு பிள்ளையோ பஞ்சத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, சமூகத்தில் நடக்கும் திருட்டுப் புரட்டுக்களையும், ஏமாற்றுக் களையும், வியாபாரிகள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோரின் பேராசையையும் துணிவாற்றலோடு அம்பலப் படுத்துகிறார், ஆனால் அழகிய சொக்கநாத பிள்ளையிடமோ. வி கபாபாரிகள், பணக்காரர்கள் முதலியோரின் நடத்தை குறித்தும் பேராசை குறித்தும் சில பாடல்கள் காணப்பட்டாலும்,வில்லியப்பரிடம் காணப்படும் உணர்ச்சி மிகுந்த தர்மாவேசமும், பட்டவர்த்