பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 தொரு சமத்காரமான 'கலையை அவ்வளவுலகுவில் பாரு" கையாண்டு வெற்றிகாண முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வில்லியப்ப பிள்ளை உண்டாக்கும் நகைச்சுவை அர்த்தமற்ற அவுட்டுச் சிரிப்போ, லிகட் வினோ தமோ அல்ல. அது நையாண்டிச் சிரிப்பு. இதனை ஆங்கிலத்தில் 'ஸற்றயர்' (Satire) என்று சொல்வார்கள். அதாவது ஆசிரி யர் சமூகத்தின் ஊழல்களைக் கண்டறிந்து, அவற்றைக் குத்த லான முறையில் கண்டிப்பதே நையாண்டியாகும். இத்ததை21 தொரு நையாண்டியில் நூலாசிரியர் தமது வெறுட்பையோ, கசப்பையோ, விரக்தியையோ பட்டவர்த்தனமாகக் காட்டிக் கொண்டுவிட்டால், அவர் எடுத்துக்கொண்ட, கருமமே திலே குலைந்து பயனற்றதாகிவிடும், இத்தகையதொரு கருமத்தில் அந்தரங்கமான அனுதாபத்தோடும் பரிவோடும்தான் அவர் எழுதி முனையவேண்டும். இவ்வாறு எழுதுவதை ஆங்கிலத்தில் Benevolent Satire (நக்மை பயக்கும் நைாண்டி) என்பார்கள். இத்தகைய நையாண்ரடிச் சுவையை மேல் நாட்டில் . பலர் வழங்கியுள்ளார்கள். நாவலாசிரியர், சார்லஸ். டிக்கன்ஸ்' எழுதிய 'பிக்விக் பேப்பர்ஸ்', நான் வாசிரியர் அனதோல் பிரான்ஸ் எழுதிய 'பெங்வின் ஐலண்ட்' முதலிய நூல்கள் இந்த வகையைச் சார்ந்தவை யாகும். மேலும் ஜோனதான் ஸ்விப்ட், அடிசன், தாக்கரே முதலிய கட்டுரையாளர்களும் இந்தத் துறையில் முழுமூச் சோடு உழைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இம் மாதிரியான நையாண்டி இலக்கியம் குறிப்பிடத்தக்கதாக எதுவும் தோன்றவில்லை. இந்தத் துறையில் பஞ்சலட்சணம் தான் முதற்பெரும் நூலாகவும் முன்னோடியாகவும் விளங்கு கிறது எனச் சொல்லலாம். பஞ்சலட்சணத்துக்கு அடுத்த படியாகச் சொல்லக்கூட, தமிழ் நாட்டில் ஒரே ஒரு நூல் தான் உள்ளது. அதுதான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதியுள்ள “நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்.” தமிழ் இலக்கியத்தில் புதுமையொளி வீசும் இரு தீப ஸ்தம் மங்களாக இவ்விரு நூல்களும் விளங்குகின்றன. எனினும் துரதிருஷ்டவசமாக, கவிமணியின் ஏனைய பாடல்கள் பிரபல