பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மடைந்துள்ள அளவுக்கு "நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்" தமிழ் மக்களிடையே பிரபலமடையவில்லை. பஞ்சலட்சணத்தைப் பற்றியோ, தமிழ்ப் பெருமக்கள் தெரிந்து கொள்ளவே இல்லை எனச் சொல்லலாம். - அKார் இந்த வில்லியர் ? தமிழ் இலக்கியத்திலேயே தன்னிகரில்லாத அங்கதப் பிரபந்தமாக விளங்கும் பெருமையும் தகுதியும் பெற்று விளங்கும் பஞ்சலட்சணத்தை எழுதிய இந்த வில்லியப்ப பிள்ளை யார் என்பதை யறிய நான் ஆவல் கொண்டேன்; ஆராய்ந்தேன். தமிழில் வெளிவந்துள்ள பல்வேறு தனிப் பாடல் திரட்டுக்களிலும். இவரது தனிப் பாடல்களோ, இவரைப்பற்றிய செய்திகளோ கிட்டுமா என்று தேடிப் பார்த்தேன். ஆனால் ஒன்றிரண்டு பாடல்கள் மூலமாகவே தனிப் பாடல் தொகுப்புக்களில் இடம் பெற்றுள்ள புலவர்கள் மத்தியிலும் வில்லியப்பரைக் காண இயலவில்லை. இதுவரை வெளிவந்துள்ள தனிப்பாடல் திரட்டுக்களில் சிறந்த தொன்றாகக் கருதத் தகும் கொட்டாம்பட்டி கருப்பையாப், பாவலர் தொகுத்துள்ள 'தனிச் செய்யுட் சிந்தாமணி'யிலும் வில்லியப்பரைப் பற்றிய பேச்சே இல்லை. இவ்வளவுக்கும் இதே கொட்டாம்பட்டி கருப்பையாப் பாவலர் வில்லிப்ப பிள்ளையின் பஞ்சலட்சணத்துக்கு ஒரு சிறப்புச் செய்யுள் எழுதியிருக்கிறார். இருந்தும், கூடிய வரையில் தனிப்பாடல் புலவர்களைத் தேடிப் பிடித்து அவர்களைப்பற்றிய குறிப்புரை களோடு தாமே தொகுத்து வெளியிட்ட ஒரு நூலில் தாமே . பாராட்டிப் பாடிய ஒரு சிறந்த கவிஞரை எப்படிச் சேர்க்க.' மறந்தார் என்பதுதான் வேடிக்கை. இவ்வளவு பெரிய : ": சிறந்த இலக்கியமொன்றைப் படைத்த வில்லியப்பர் தனிப் - - பாடல் திரட்டில் இடம் பெற இயலாதவாறு, ஒரு தனிப் பாடலும் பாடாமலா போய்விட்டார் என்றும் - கேட்கத் தோன்றுகிறது. இதன் பின் சேது சமஸ்தான வித்துவான் "