பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214. தமிழ் இலக்கிய வரிசையில் பஞ்சலட்சணத்துக்கும் ஓர் இடம் உண்டு எனப் பேராசிரியர் சுட்டிக் காட்டியிருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். இதனைத் தவிர, பூர்வாசிர மத்தில் சிவகங்கை வாசியாகவிருந்த யோகி சுத்தானந்த பாரதியார் 'கல்கி' தீபாவளி மலரொன் றில் எழுதிய . கட்டுரையில் வில்லியப்பரைப் பற்றி எழுதியிருக்கிறார் என அறிந்து, அதனையும் தேடிப் பிடித்துப் பார்த்தேன். அதிலும் குறிப்பிடத்தக்க குறிப்பு எதுவும் இல்லை. ' . இத்தகைய சூழ் நிலையில் நானே சிவகங்கையிலும் பிர மனூரிலும் எனது நண்பர்களின் சிலரின் உதவியோடு வில்லியப்பரைப்பற்றி நேர்முகமாகவே விசாரித்து விவரங்கள் சேகரிக்க முனைந்தேன், வில்லியப்ப பிள்ளையின் வம்சத் தரரின் மூலமும் சில விவரங்களைத் தெரிந்தேன். எனினும் அவற்றின் மூலமும் அதிகமான விவரங்கள் கிட்டவில்லை, பாவம், சிறந்ததொரு புலவரைத் தமது மூதாதையராகப் - பெற்று, அவரைச் சில ஆண்டுகளுக்கு முன்பே இழந்திருந்தும் கூட, அவரது குடும்பத்தாருக்கே அதிகமான விவரங்கள் தெரியவில்லை யென்றால் தமிழ்ப் புலவர்களின் கதியைப்பற்றி என்ன சொல்ல இருக்கிறது? தெரியவந்த விவரங்கள் இவை தாம்; வில்லியப்பபிள்ளை சோழிய வேளாளர் எனப்படும் வகுப்பில் பிறந்தவர்; இன்றைக்குச் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான், தமது அறுபத்து ஏழாவது வயதில் காலமாகியுள்ளார். மேலும் அவர். சிவகங்கையில் கஜான்சி வேலைக்கு வந்து, உக்கிராண மேற்பார்வை பார்த்து வந்துள்ளார். வயல்சேரி சரவணக் கவிராயரிடம் தமிழ்ப் பாடம் பயின்றிருக்கிறார். அத்துடன் அவர் சிவகங்கை ஜமீனைச் சேர்ந்த பிரமனூர் கிராமத்தின் கணக்குப்பிள்ளை யாக இருந்து வந்தாரெனவும், சிவகங்கை ஜமீன்தார் கெளரிவல்லன. துரைசிங்கத் தேவரோடும், அந்தப்புர மாதரோடும் விகட வார்த்தைகள் பரிமாறி அவர்களை மகிழ்வித்து வந்தாரெனவும், காலமான சமயத்தில் அரண்

  • வா