பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22) மராமத்து வேலைகளில் பெரும்பான்மையான மக்கள் வேலை பார்க்கிறார்கள்; அதன் மூலம் அரை வயிற்றுக் கஞ்சியாவது' பெற வழி பெறுகிறார்கள். ஆனால் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய விரும்பாதவர்களோ உரை ஏய்த்துப் பிழைக்க முனைகிறார்கள். எரிகிற வீட்டில் பிடுங் கியது லாபம் என்ற முறையில் பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டுகிறார்கள்; பசியில் முதலெடுக்கிறார்கள்; காசுக் கடைக்காரர், ஜவுளிக் கடைக்காரர், பொற்கொல்லர், வேசியர் முதலியோரின் மோசடித்தனம், பிழைக்க வழி யற்று, 'பொய் வேடமிட்டு, வைத்தியன், சாமியார், கோடங்கி, சோதிடன், புலவன் முதலிய அவதாரமெடுப்பவர் 'களின் ஈனத்தனம், லேவாதேலிக்காரன் மோசடி, குடும்பச் சண்டைகள்-முதலியன எல்லாம் சகஜமாகின்றன. எங்கும் ஏமாற்றும் எத்து சித்து வேலைகளும் அதிகரிக்கின்றன, குடும் பங்கள் சிதறுகின்றன, வியாபாரம் படுக்கிறது. கடைசியில் ஜனங்கள் அனைவருமாக வேறு வழியின்றி மதுரை மாநகரில் கோவில் கொண்டுள்ள சோமசுந்தரக் கடவுளிடம் சென்று முறையிடுகிறார்கள். . சோமசுந்தரக் கடவுளோ கடவுளர்களின் ஏலாத் தனத்தையெல்லாம் விஸ்தாரமாக எடுத்துக் கூறித் தம்மால் அவர்களுக்கு உதவ இயலாது எனக் கூறியீடு கிறார். எனினும் பாட்டுடைத் தலைவரான சிவகங்கை ஜமீன் தாருக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்து மக்களை வழி யனுப்பி வைக்கிறார். அந்தத் திருமுக விலாசத்தைப் பாடி வந்த புலவருக்கும், ஜனங்களுக்கும் ஜமீன்தார் வெகுமதி கள் பல அளித்து வறுமையைப் போக்குகிறார். அத்துடன் தெய்வ கிருபையால் மழையும் பொழிகிறது; பூமி செழிக் கிறது; வாழ்க்கை மீண்டும் மலர்கிறது.. பஞ்சலட்சணத்தில் காணப்படும் கதாம்சம். இவ்வளவேதான். எனினும் இந்தச் சாதாரணமான கதையைக் கொண்} வில்வியப்பு பிள்ளை அற்புதமான பாத்திரப் படைப்புக்கள் நிறைந்த ஒரு தலைசிறந்த இலக்கியத்தை, சிறு காப்பியத்தையே