பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 லட்சணத்தின் இந்தப் பகுதிகள் தான் நீளமாகவும் சுவா, ரசியமாகவும் உள்ளன. இவற்றிலே சில சிறுகதைகளைப் போலவும் அமைந்துள்ளன என்றே சொல்ல வேண்டும். எனவே உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்களைச் சந்திக்கும் நாம் அவர்களை வெறும் 'நடைச்சித்திர' ங்களாகக் காணா மல், குறிப்பிட்ட கதைச் சூழலில் நடமாடும் நபர்களாகவே காண்கிருேம். வில்லியப்பரின் வருணனை களையும் ஒவ் வொரு - பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் முறையை யும் பார்த்தால், அவர் சகல தொழில் முறை ரகசியங்களி லும், சோதிடம், வைத்தியம் முதலிய சாஸ்திரங்களிலும் ஒரளவுக்கோ அல்லது . பேரளவுக்கோ ஞானம் ' திறையப்பெற்றவர் என்றே நாம் 'கருதத் தோன்றுகிறது. மேலும் ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையையும் நடை யுடை பாவனைகளையும் வருணிக்கும் முறைமையில், ஆசிரி யரது தீக:9ண்யம் மிக்க கிரகிப்புத் தன்மை, வாழ்க்கையில் பழகும் பல பாத்திரங்களின் நடவடிக்கைகளை உள்ளும் புறமும் அணுவுக்கணு தெரிந்து, உருவாக்கும் தன்மை ஆகிய இரண்டும் பரிபூரணமாக நிரம்பித் ததும்புகின்றன என்றே சொல்லவேண்டும். இவருக்கு முன்னாலிருந்த பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பிரபந்தம் புலவர்களும் பாத்திர சிருஷ்டியில் நிபுணர்கள் தான். என்றாலும் இவரைப் போன்ற தீக்ஷண் யக் கண்ணோட்டம் அவர்களுக்கு இல்லை யென்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக, போலிச் சாமியாரின் வருகை பற்றிக் கூறும்போது, காவிக்கலை உடுத்தி, கால்தலை தோன்றாது உடலம் மேவு உத்தரீயம் மிக வணிந்து-கூவு கண்ட நன்மணி ருத்ராக்ஷமிட்டு, நாலுமணித் தாழ்வடமும் ' கன்மிஷம் சேர் உள்ளக் கர வடமும்--மென்கரத்தில் மாத்திரைக் கோல் ஏந்தி, இறுமாப்புடன் அண்ணாந்து, நடந்து