பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 புருவம் எழப் பார்த்து, மெலப் புன் சிரிப்பும் தோன்ற சிரம் அசைத்து, சற்றே சிந்தித்து,-தரும் இடக்கைத் தாதுவையும் பார்த்தபின்பு, தன் விரல் கீழ்கண்டி, அதில் ஏதுவைக் கண்டான் போல் இயம்புவான் என்று கூறும் போதும், நூலாசிரியர் ஒவ்வொருவரின் அங்க அசைவுகளையும், பாவங்களையும், பம்மாத்துக்களையும் நின்று நிதானித்து வெளியிடுகிறார். இதன் மூலம் அந்தந்தப் பாத்திரங்களைச் சதையும் ரத்தமும் கொண்ட பிண்ட வடி 'வங்களாக, பிரத்தியட்ச மனிதர்களாக நம் முன்னே ஓரிரு வரிகளின் மூலம் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார். இவ்வாறு பாத்திரங்களைக் கொண்டு வந்து நிறுத்தும் அருமையான ஆற் றல்) இவரைப்போல் வேறு எந்தப் பிரபந்தப் புலவர் ரிடத்திலும் காணப்படவில்லை என்றே சொல்லலாம். - F ) ஆசிரியர் நையாண்டி முறையில் தமது கருத்துக்களை எடுத்துக் காட்டி, சொல்லுக்குச் சொல் பொட்டி வைத்துப் பேசும் அங்கத முறையையும் கையாண்டு வெற்றி பெற்று திருக்கிரர். இலக்கிய விமர்சன பாஷையில் இதனை ஆங்கி லத்தில் Dramatic Irony (நாடக அங்கதம்) என்று சொல் வார்கள். இதற்கு உதாரணமாக, சாமியார் வேடம் பூண்டு வருபவன் தனது சுய விளம்பரத்தைச் சொல்கின்ற விவரத் என தப் பார்க்கலாம். அவன் தன்னைப் பற்றிப் பின் வருமாறு: விளம்பரப்படுத்திக் கொள்கிறான்; சாவா அமிர்த ரச சஞ்சீவிளியுடனும் மூவா அநேக முறை புலம் --- பாவகமாய்ச் செய்து முடித்து னது; தேர்ந்த ரக வாதமதில் கை கண்டது இந்தக் கடுங் கழுதை - மெய் சோர்ந்து, பிள்ளை விலை என்று வந்த பேதை மடவார் புலர்க்கும் பிள்ளை கொடுத்தது இந்தப் பேய் மாலம்-உன்ளபடி மைவசியத்தால் உலக மன்னவர்கள். காரியத்தைக் ,