பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 அடகு வைத்துக் கொள்வீர் என்று ஆபரணம் தந்தால் படையும் நடுநடுங்கும் பாம்பாம்-கடமேவும் உம்பல் மெய்த்தோலுக்கு உடையாய் அணிந்திருக்கும் அம்புலித் தோலுக்கும் விலையார் கொடுப்பார்?- பம்புடை &ாக வெண்பையை அளிக்கில் அதைக் கண்டவர்கள் சீசீ என்றேசி உமைச் சீறுவார் - மாசார்ந்த வக்கு மணியைக் கொடுத்தால், ஆர்சீந்துவார்கள்? வெஞ் சக்கை எருக்கு ஊமத்தால் சாரமுண்டோ ?-கைக்குள் தருக்குற்ற சூலம் அதைத் தந்தால் ஓர் ஆண்டுக் கருப்பட்டி ஈவான் கடையில் இருக்கின்ற வீடோ மயானம்; அந்த வெட்கக் கேட்டை என்ன சொல்வேன் ஓடு அன்றிக் கையினில் வேறொன்றுமில்லை- நாடிக் கனமாய் நினைப்பீர் என் காரியத்தை நீவிர், வினவியுற்றால் வெட்ட வெளியாம்! (ஒற்றி: (சிலேடை.) அடமானம்; ஒற்றியூர்-- இந்நகரோ: இந்த மதுரை நகரோ-வெண்டை: வி பூதிப்பை.-கருப்பட்டி: பனைவெல்லம்-வெட்ட வெளியாம் : (சிலேடை) ஆகாய வடிவம்; ஒன்றுமற்ற சூன்யம்) இவ்வாறு தமது ஊர், ஆபரணம், ஆடை, அலங்காரம், ஆயுதங்கள் எதுவுமே மக்களுக்குப் பயன்படப் போனதில்லை என்று கூறிய சோமசுந்தரக் கடவுள் இதைப் போலவே தமது குமாரர்கள், திருமால், பிரம்மா ஆகியோரெல்லாரும் கூட உதவுவதற்கு வழியற்றவர்கள் என்றும் நிந்தாஸ்துதியாகக் கூறி, இறுதியில் அந்த மக்களிடம் சிவகங்கை ஜமீன்தாருக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார். இந்த நிந்தாஸ்துதிப் பகுதிகள் முழுவதுமே அற்புத