பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த நாடகங்களும் கீர்த்தனைகளும் எவை என்பது தான் தெரியவில்லை. அவை கிடைக்காமற் போனதில் அதிசயப்படுவ் தற்கோ, , வருந்துவதற்கோ எதுவுமில்லை. ஏனெனில் பத்தொன்பதாம் நாற்றாண்டுக் காலத்தில் தமிழில் ஏராள "மான் நாடகங்களும் நாடக வகைகளும் தோன்றின என்று சொல்லலாம். அந்த நூற்றாண்டில் அச்சில் வெளிவந்த நாடகங்கள் மட்டுமே நூற்றுக்கு மேலிருக்கும் என்று அதைப் பற்றி ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள். அச்சில் ஏறாமற் போனவை எவ்வளவோ? அச்சேறிய நாடகங்களிலேயே பல . கிடைக்காமற் போனபோது, அச்சேறது போன் நாடகங் களைப் பற்றிக் கவலைப்படுவானேன்? மேலும் அந்த நாடகங் கள் சரித்திரரீதியான் பட்டியல் தருவதற்கு உதவியிருக்கக் கூடுமேயன்றி, அதனால் இலக்கிய உலகுக்கு, மாபெரும் நஷ்ட மென்று சொல்லக்கூடிய அளவுக்கு இலக்கியத்தரம் மிகுந்த நாடகங்கள், எதையும் நாம் இழந்துவிடப் போவதில்லை என்றே சொல்லலாம். தந்தி விடு தூது ஆசிரியரான சிவசண்முகம் பிள்ளையைப்பற்றி நமக்குக் கிடைக்கக்கூடிய செய்திகள் இல்வளவே. இன்றைத் , தேதியில் இவரைப்பற்றி மேலும் விவரங்கள் எதுவும் கிட்ட வில்லை. என்னிடமுள்ள தந்தி விடு தூது. என்ற நூலின் அச்சுப் பிரதி சென்ற நூற்றாண்டின் இறுதியாண்டில் (1900) அச்சான தாகும். அதுவே இந்த நூலின் முதலும் இறுதியுமான பதிப் பாகத் தோன்றுகிறது. இந்த நூலுக்குச் சாற்றுக்கவி இயற்றி யுள்ளவர்கள், நூலிலே காணப்படும் சில குறிப்புக்கள் முதல் பவற்றைக்கொண்டு, நூலாசிரியர் இந்த நூலை 1900-ஆம் ஆண்டுக்குப் பத்துப் பதினைந்து ஆண்டுகள் சற்று முன்பின்னாக இயற்றியிருத்தல் கூடுமென ஊகிக்க முடிகிறது. மேலும் ஆசிரியர் இந்த நூலில் கையாண்டுள்ள கதாம்சத்தின் மூலம் நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமது நாட்டில் நாடகங்கள் எவ்வாறு நடந்தன, எத்தகைய நாட்கங் கள் நடிக்கப் பெற்றன், நாடகங்களை நடத்திய ஆசிரியர்கள்