பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. இந்த நூலிலே காணப்படும் கதையம்சம் எதார்த்தத் தன்மையும் சுவாரசியமும் மிக்கது ஆகும். அந்தக் கதா சாரம் பின்வருமாறு: ': திருப்போரூரில் சைவ அந்தணர் குலத்தில் பிறந்த காங்கேயன் கல்வி கேள்விகளில் மேம்பட்டு, பதினாறு காரியங்களை ஒரே - சமயத்தில் பார்க்கும் சோடச். அவதா னம் என்ற வித்தையிலே தேர்ச்சி பெற்று அவதானியா கிறார். இவ்வாறு புகழ் பெற்ற அவதானி தமது கீர்த் தியைச் சென்னை மாநகரிலும் நிலை நாட்டக் கருதி, சென் னைக்குச் செல்கிறார். சென்னையிலுள்ள ' கல்விமான்களை யெல்லாம் சந்தித்து, அவதான வித்தைகள் செய்து காட்டி, பேரும் புகழும், பரிசில்களும் பெற்றுச் சிறக்கிறார். இந்தச் சமயத்தில் அவருக்குத் திருமணமும் ஆகிறது. மணவாழ்வில் , ஈடுபட்டு, சென்னையில் குடும்பம் நடத்தி வத்த அவதானி, ஒரு நாள் தமது நண்பர் ஒருவருடன் சென்னையிலுள்ள 'பீப்பிள்ஸ் பார்க்' , (Peoples Park), மிருகக் காட்சிச்சாலை - முதலிய இடங்களை யெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுத் - திரும்பும் வழியில், இரவு நேரத்தில், சென்னை நகரின் ஒரு பகுதியான சிந்தாதிரிப் பேட்டைக் குள் பிரவேசிக்கிறார். அங்கு ஒரு வீட்டின் முன் ஏகக் கூட்டம், விசாரித்ததில் உள்ளே நாடக ஒத்திகை நடப் பதாகத் தெரியவருகிறது. உடனே அந்த நாடகத்தைப் பார்க்கும் ஆவல் அவதானியாருக்கு மீறுகிறது. எனவே காவல்காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அவர் ஒத்திகை நடக்கும் இடத்துக்குச் சென்று, அதனைக் கண்டு களிக்கிறார். ஒத்திகை முடிந்ததும், அவர் அந்த நாடகத்தையும் நடிகர்களையும் பற்றி, அவர்களிடம் விமர் சனம் செய்கிறார். இவரது. - கல்வித் திறமையையும் விமர் சனத்தையும் கண்டு வியந்து, அந்த நாடகக் குழுவினர் இவரையே தமது ஆசிரியராகக் கொள்ள முன் வருகிறார். கள். அவதானியும் அவ்வாறே அவர்களுக்கு ஆசிரியராகி, நாடகங்கள் 'எழுதி அவற்றை ' நடிக்கவும் உதவுகிறார்.