பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தியைத் தூது விடுவானேன்? இதரம்பத்தில் தூது விடுவதற்கான பத்துப்பொருள்கள் எவை என்பதைப் பற்றிப் புகழேந்திப் புலவர் பாடியுள்ள வெண்பாவைப் பார்த்தோம். அந்த வெண்பாவில் அன்னம், மயில், கிகள் ளை (கிளி), மேகம், பூவை' (நாகணவாய்ப்புள்), பாங்கி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய பத்துமே தூதுவிடற்குரியவை என்று இலக்கணம் கூறப்படுகின்ற தல்லவா? இந்த இலக்கண் வரம்பை மீறி, தாம் ஏன் தந்தி யைத் தூதாக விடுக்க நேர்ந்தது என்பதற்கான காரணங் களைத் தந்து விடு தூதின் ஆசிரியர் கூறுகிறார். ஆம். மரபு வழுவிய மு ைநதியில் புதிய பொருளைக் கவிட்ட பொருளாக்கும். போது, மரபு தழுவிய மறையிலேயே தமது காரணங்களையும் சமத்காரமாக அவர் வெளியிடுகிறார். எப்படி? அன்னத்தை ஏவினால் ஆங்கதுவும் மான தத்தை உன்னி விண்ணோடி ஒளிக்குமே!-வன்னமயில் தன்னைவிடின் மேகம் தனைக்கண்டு அகவும் அன்றி மன்னியவேள் காணின் வசமாமே!.-உன்னதமாம் நல்ல பசுங்கிளியை நாடவிடில், சொன்னதையே சொல்லும் அல்லால் மற்றொன்றும் சொல்லாதே!- .. புல்லியதாம் பூவையை ஏவில், அது போம்வழியே போகாமல் தாவி இரைக்கு ஆங்காங்கு தங்குமே!-மா உறையும் மான தம் : தேவலோகத்திலுள்ள ஒரு வாவி; அகவும் : சத்தமிடும்; வேள்: முருகக்கடவுள்; மா உறையும்: மாமரத் தில் வாழும்.