பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 காணா வெறுப்பாகும் கருங்குயிலை ஏவில், மனக் கோண் இன்றிக் கூவும்; இன்சொல் கூறாதே!- பாண் இயற்றும் வாடினைத் தாகவிடின் மாமலர்ச் சோலைக்குள் மது உண் டு மயக்குண்டு அங்கு உழலுமே!--கொண்டலினை விட்டால், மனம் திகைக்க விண்ணில் குமுறும்; ஒரு கெட்டாகச் செல்ல நினையாதே!-மட்டாரும் தென் றலை விட்டால், கல்வி தேறாத காமுகரைச் சென்றரற்றும்; மீண்டும் திரும்பாதே!-அன்று முதல் உள்ள அனைத்தும் பாங்கிக்கு ஓதி அனுப்பிடில், என் வள்ளல் அறிந்து, என்னை மதியாளே! - கள்ளமிலா என் நெஞ்சையே ஏவ, அவட்கு இன்னல் விளைத்தோம் முன் என நல் கெஞ்சி பாற்செல்ல நாணுதே!-அன்னதால் இத்தகைய மாசு அணுவும் இல்லா உனையனுப்பு . உத்தமனே! வந்தேன்! உரைப்பக் கேள்! இத்தனை காரணங்களையும் கூறி, அந்தப் பத்துப் டெ.Nாருள்களையும் நிராகரித்துவிட்டு, தாம் தந்தியைத் தூதனுப்பத் துணிந்ததாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அப்படிக் குறிப்பிடும்போது, தூதுப் பொருளான தந்தியின் சிறப்பைப்பற்றியும் வாயார மனமாரப் புகழ்ந்து பாராட்டு கிறார். கண்ணுக்குத் தெரியாத, ஓர் அபூதச் சக்தியின் மூலம் இயங்கக்கூடிய நவீன விஞ்ஞான சாதனமான தந்தியையும் அதன் மகத்துவத்தையும் பற்றி, பழைய தமிழ்மரபு வழி நின்றே அவர் பாராட்டிப் பேசும் வரிகள். நமது கவனத்தைக் கவருகின்றன. தந்தி என்ற. சாதனத்துக்கும், உலகியல் மனக்கோன் : ஓரவஞ்சகம்; பாண் : இகை; கொண் டல் : மேகம்; நெட்டாக : நேராக; மட்டாரும் : மணம் மிகுந்த; வள்ளல் : அந்தரங்கம், வண்டவாளம்; அவட்கு : அவதானியின் மனைவிக்கு; நெஞ்சி : இதயத்தாள்; அன்ன தால் : ஆகையால்.