பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என அந்த மக்கள் பூங்காவை வருணிக்கிறார். இந்த வருணனை ஒன்றும் மிகையான தல்ல; ஏனெனில் சென்னை நகரிலே யுள்ள சிறந்த பூங்காவாக' இன்றும் விளங்குவது அதுதான்; அங்குதான் இக்காலத்திலும் ஆண்டாண்டு தோறும் மலர்க் கண்காட்சி நடைபெறுகின்றது. இதன் பின்னர் இந்தப் பூங்காவுக் கருகில், இயற்கை யழகோடும் நீர்த் தேக்கங்க ளோடும் கூட்டிக் கவினுற விளங்கும் மிருகக்காட்சிச் சாலையையும் அவர் வருணிக்கிறார். மாவனத்தில் உள்ள பல மிருகத் தோடு பல பட்சிகளும் தள்ளரிய நீரில் வாழ் சாதிகளும்-மெள்ள நகர்வனவும் ஆகிய எந் நாட்டினும் வாழ் சீவ'. வகைகளையும் கண்ட மகிழ் வால்---நகலகமும் ஓடி, நீரோடை தனில் ஓடம் விடுத்து, விளை ) வாடித் திரும்பி அதிசயித்து-நாடியே மாலைப் பொழுதில் வருவார் மனம் களிக்கச் சோலை நடுவில் சொகுசு ஆர்ந்த-வேலைசேர் 'பாண்டு ஸ்டாண்டுக் குட்பட்டுப் பயிலும் சங்கீதம் அதை வேண்டு மட்டும் கேட்டு விருப்பமாய்-மீண்டும் மிக உல்லாசத்தோடும் ஒயிலாய் உலாவி வந்து சல்லாபம் செய்வார்கள் தாமிருக்க--புல்லார்ந்த - வட்ட ‘ரவுண்டைச் சுற்றிவைத்த நாற்காலிகளின் திட்டமும் மற்றும் சேர் சிறப்பும்.... தூது நூலாசிரியர் கூறியுள்ள இந்த வருணனை இன் றைக்கும் பொருத்தமானதாகவே இருக்கிறது என்று சொல்லலாம். இன்றும் சென்னைக்குச் செல்பவர்கள் இந்தக் காட்சிகளைக் காண இயலும்; , மிருகக் காட்சிச்சாலை, அங்குள்ள வாவியிலே உல்லாசப் படகு விடும் காதலர்கள்.