பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை நம் நாட்டுக்கு அச்சு எந்திரம் - இறக்குமதியான பின்னால், இன்றைக்குச் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் தமிழ்ப் புத்தகம் அச்சேறியதாகத் தெரி கிறது. எனினும் தமிழ் நாட்டில் சென்ற நூற்றாண்டில் தான் அச்சுத் தொழில் நன்றாகப் பசை பிடித்து நிலை பெறத் தொடங்கியது. அச்சு எந்திரத்தின் வருகை மொழி வளர்ச்சிக்கு ஒரு புரட்சிகரமான சூழ்நிலையையே' உருவாக்கிக் கொடுத்தது. அச்சு எந்திரம் வந்த பின்னர் ஏட்டுப் பிரதிகளாகவிருந்த பழைய தமிழ் நூல்கள் பலவும் அச்சு வாகனமேறிப் பல பிரதிகளாகப் பல்கிப் பெருகி, - நம்மிடையே பரவும் வாய்ப்பைப் பெற்றன. இதனால் நமது பழம்பெரும் நூல்கள் பலவும் செல்லரித்துச் சிதைந்தழியாமல் நம்மை வந்தடைந்தன. பேரிலக்கியங்களைத் தவிர, பல்வேறு சிற்றிலக்கியங்களும் சில்லறைப் பிரபந்தங்களும் நம் கைக்குப் புத்தகங்களாக வடிவெடுத்து வந்து சேர்ந்தன. அச்சு எந்திரம் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பினால் சென்ற நூற்றாண்டில் ஏராளமான புதிய நூல்களும் உருவெடுத்து அச்சாகி வெளிவந்தன. ' . ' . எனினும், அச்ச வாகனத்தில் ஏறியிறங்கிவிட்ட காரணத்தால் மட்டும் ஒரு இலக்கியமாகி விடுவதில்லை. பதரும் சாவியுமான படைப்புக்களும்கூட அச்சேறிய . கார ணத்தால் புத்தகங்கள் , என்ற பெயரில் , உலr வரத்தான் செய்தன; செய்கின்றன. எனினும் அச்சேறிய நூல்களில் நல்லவை பலவும் கால வெள்ளத்தில் நீந்தி, வாழையடி வாழையென - மறு பதிப்புக்கள் கண்டு, 'மக்கள் மத்தியிலே இன்னும் நிலவுகின்றன. அதே சமயத்தில் ' கால வெள்ளத்தில்