பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 யைப் போலவே, இந்த அவதானியும் நடிகையிடம் (தாசி மகளிடம்) : மயங்குகிறார். ஆனால், அவற்றில் சிற்றின்பக் கேளிக்கைகள் அளவுக்கு மீறி வருணிக்கப்பட்ட டுள்ளது போல், இந்த நூலில் வருணிக்கப்படவில்லை; சொல்லப்போனால், அதில் ஆசிரியர் விசேடமான கவனம் எதுவும் செலுத்த விரும்பவில்லை என்றே கூறலாம். விறலி விடு தூதுக்களில் வசிய மருந்து தயாரிப்பதுபோல் இதிலும் தயாரிக்க நினைக்கும், ஒரு காட்சியைப் புகுத்தியுள்ளார். அவற்றிலே வரும் - தாய்க்கிழவி.-அவதானி சண்டையை ஒப்ப, இந்த நூலில் ' பார்ப்பாரக்குப்பி--அவதானி கை கலப்பை வருணித்துள்ளார். இறுதியாக அவதானி, தெய் வங்களிடம் சென்று முறையிடும் சம்பவம் ஒன்று தான் விறலி விடு தூதில் காணப்படாதது. ஆனால் இந்த உத்தி யையும் நூலாசிரியர் இவரது நூல் இயற்றப்பட்ட சமயத்தில், வெளிவந்த 'பஞ்ச்லட்சணத் திருமுக- விலாசம்” என்ற நூலிலிருந்து கடன் வாங்கியிருக்கலாம் என்றே தெரிகிறது. (இந்த நூலைப்பற்றிய அறிமுகக் கட்டுரை இந்நூலின் இறுதியில் இடம் பெறுகின்றது.) ஆனால் பஞ்ச லட்சணத் திருமுக விலாசம் எழுதிய வில்லியப்ப பிள்ளையிட முள்ள விசால மனப்பான்மை தந்து விடு தூது நூலாசிரி யரிடம் காணப்படவில்லை. வில்லியப்பர் "சைவ, வைஷ்ணவ மூர்த்தங்கள் அனைத்தையுமே நிந்தாஸ்துதியாகப் பாடி யுள்ளார்; பஞ்சத்தில் வாடிய மக்கள் எல்லாத் தெய்வங்க ளிடத்தும் சென்று முறையிடுவதாகப் பாடியுள்ளார். சிவசண்முகம் பிள்ளையோ தாம் சைவர் என்ற காரணத்தால், தமது அவதானி 'சிவ ஸ்தலங்களுக்கு மட்டுமே செல்வதாகப் பாடியுள்ளார். மேலும் பழனி மலை முருகனைப்பற்றி அவர் பல படப் போற்றித் துதித்துப் பல வரிகள் பாடுவதிலிருந்து, அவருக்குச் சிவன் மீதுள்ள பக்தியைக் காட்டிலும் முருகன் மீதுள்ள விசேடமான பக்தியையும் புலப்படுத்தியுள்ளார். .' மூர்த்தங்கள் படவில்லை. இந்து விடு' மொத்தத்தில் 'தந்தி விடு தூது' கவிதா சக்தியி லும், கற்பனைத் திறத்திலும், சொல்லாட்சியிலும்,