பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டே செல்கிறார். இவ்வாறு விளக்கிவிட்டுப், பணத் தின் பிரதானத் தன்மையைக் குறித்துக் கீழ்க்கண்டவாறு தத்துவார்த்தம் செய்கிறார்: 'பணம்தான் மனித வாழ்க்கையோடும், மாந்தரோடும், இயற்கையோடும், சமுதாயத்தோடும் என்னைப் பிணைத் திருக்கும் தளை என்றல், தளைகளுக்கெல்லாம் பெரிய தளை 'யாக அந்தப் பணம்தானே. இருக்க முடியும்? எனவே எல்லாத் தளைகளையும் பிணைக்கவோ, பிரிக்கவோ செய் கின்ற சக்தியும் பணத்துக்கு உண்டல்லவா?...எனவே சமுதாயத்தில் பிளவையோ பிணைப்பையோ ஏற்படுத்து கின்ற உண்மையான சக்தியும் சாதனமும்கூடப் பணம் தானே!... மனிதன் . என்ற முறையில் எனது சொந்தச் சக்தியைக் கொண்டு சாதிக்க முடியாதவற்றை யெல்லாம் பணத்தின் மூலமாக நான் சாதித்துவிட முடியுமே...நான் சாப்பிட விரும்பினால், நடப்பதற்கு என் கால்களிலே 'சக்தியின்றி நான் வண்டியிலே செல்ல விரும்பினால், பணம் எனக்கு உணவையும் , தேடித் தந்து, வண்டியையும் கொண்டுவந்து உதவுகின்றது. இதன் மூலம் என த, எண் ணமும்' கற்பனையும் பணத்தின் உதவியால் செயல் படுகின்றன; சித்திக்கின்றன. இதன் மூலம் பணம் உண் மையில் சிருஷ்டி சக்தியாகவும் ஆகிவிடுகிறது........” உலகாயத வாதியான கார்ல் மார்க்ள் இத்தகைய உதாரணங்களின் மூலம் பணத்தின் தத்துவத்தை விளக்க முனைந்து, அதிலிருந்து பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளைக் கூறத் தொடங்குகிறார். அந்த முடிவுகளையெல்லாம் நாமும் ஆராயப் புகுந்தால், வாசகர்களுக்குத் தலைவேதனை எடுத்துவிடும். மார்க்ஸின் தத்துவார்த்த விளக்கங் களைப் புரிந்துகொள்ளத் தெரியாதவர்களோ, தெரிந்தும் ஒப்புக்கொள்ளாதவர்களோ' இருக்கலாம். ஆனால் பணத் தின் சக்தியையும் மகத்துவத்தையும் தெரிந்துகொள்ளவோ, ஒப்புக்கொள்ளவோ மார்க்ஸ் வந்து தான் உதவி