பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 ) பொருளாகக் கருதவில்லை; மாணிக்கவாசகரைப்போல், “'வைத்த நிதி... என்னும் சித்த விகாரக் கலக்கமாகக் கருதி வில்லை. மாறாக, அவர் செல்வத்தை, “பொருள் என்னும் பொய்யா விளக்கம் எனப் போற்றினார். வாழ்வில் பொருளுக்குள்ள வலிமையையும் முக்கியத்துவத்தையும் அவர் மறுக்கவோ, மறைக்கவோ துணியவில்லை. எனவே தான் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு!” என்று அழுத்திக் கூறினார் அவர். “பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லதில்லை பொருள்” (ஒரு. பொருளாக-பொருட்டாக மதிக்கப்படாத வரையும்கூட, பொருளாக மதிக்கப் பண்ணுவது பொருளை யன்றி வேறு பொருள் இல்லை) என்று அதன் வலிமையை ஆணித் தரமாக எடுத்துக் கூறிவிட்டு, “செய்க பொருளை! என்று நமக்கெல்லாம் ஆணையிடுகிறார்; , அவரது கருத்தில் பொருளின் வலிமையை மிஞ்சிய லேறு பேராயுதமே உலகத்தில் இல்லை. (செய்க பொருளை ; செறுநர் செறுக் கறுக்கும் எஃகு அதனில் கூரியது இல்!) வள்ளுவரைப் போலவே, பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த வேறு பல நூல்களும் செல்வத்தின் மகிமையை எடுத்துரைக்கின்றன. ஒத்த குடிப் பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார் செத்த பிணத்திற் கடை” (பணமில்லாதவன் பிணம்) என்று பேசுகிறது நாலடியார். உடையதனைக் காப்பான் உடை யான், அதுவே உடையானைக் காப்பதும் ஆகும் (பொருளை ஒருவன் காப்பாற்றினால், பொருள் அவனைக் காப்பாற்றும்) என்று கூறுகிறது பழமொழி. இவ்வாறாக, ! பணத்தின் மகிமையைக் குறித்து ஷேக்ஸ்பியரையும் 'கதேயையும் மேற்கோள் காட்டி, கார்ல் மார்க்ஸ் விளங்கவைத்த உண்மைகளை நமது ' வள்ளு வரும் முன்றுறையரையனாரும் எவ்வளவு நன்றாக எடுத்துக் கூறியுள்ளார்கள்! பொருளாதார அடிப்படையில் உலகியலை அர்த்தப்படுத்திய மார்க்ஸின் புதிய சித்தாந் தத்தைச் சிலர் ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆனால்,