பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 69 பெறுகிறார் என்றும் பார்த்தோம். அதன் ஆசிரியர் உண்மை யிலேயே தூது சென்று செய்தியைத் தெரிவிக்கக்கூடிய ஓர் எதார்த்தமான சக்தியை, நவீனமான விஞ்ஞான சாதனத்தைத் தமது தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுத்ததே இவருக்கு ஒரு பெருமை என்றும் கண்டோம். தந்தி விடு தூது என்ற நூலோ இன்றைக்குச் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதுதான். 'பண விடு தூது' என்ற நூலோ இன்றைக்குச் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் முன்பே இயற்றப்பட்டதாகும், (நமது விமர்சனத்துக்குரிய பண விடு தூதைத் தவிர, 19-ம் நூற்றாண்டில் வேறொரு பண விடு தூது நூலும் தோன்றியுள்ளதாகத் தெரிகிறது. 'இராமேசுவரம் இராம லிகேர் பேரில் பண விடு தூது" என்ற தலைப்புடைய அந்த நூலை இயற்றியவர் அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர் என்பர். இந்தச் சரவணப்பெருமாள் கவிராயரின் பேரப்பிள்ளையான சதாவதானம் சரவணப்பெருமான் கவிராயர் தான் , "சேதுபதி விறலி விடு தூது” என்ற நூலை இயற்றியவர். ஆனால் இந்தப் பண விடு தூது என்ற நூல் இப்போது கிட்டவில்லை). வரையறுக்கப்பட்ட இலக்கண வரம்புக்குப் புறம்பாகப் புதியதொரு பொருளைத் தூதுப் பொருளாகக் கொள்வதில் நமது அறிமுகத்துக்குரிய “பண் விடு தூது' பல ஆண்டுகளுக்கு முன்பே முன்னோடி யாக இருந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, அதன் நூலா சிரியர் பணத்தைத் தமது தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுத் ததிலேயே ஒரு விசேட முக்கியத்துவமும் அழுத்தம் பாய்ந்த எதார்த்தத் தன்மையும் அடங்கியுள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்வதற்கு, அதன் கதாம்சத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனைப் பின்னர் பார்ப் போம்.