பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 கூற்று.) இவர் இலக்கிய ரீதியாகவும் குறிப்பிடத் தகுந். தவர், 'குட்டித் தொல்காப்பியம்' என்று புகழப்படும் 'இலக் கண விளக்கம்' என்ற நூலை இயற்றிய வைத்தியநாத தேசிகரை இலக்கிய உலகம் அறியும். இந்த வைத்தியநாத தேசிகர் திருவேங்கடநாதையனால் ஆதரிக்கப்பட்டு வந்தவர், மேலும் இந்தத் திருவேங்கடநாதையனே 'மெஞ்ஞான விளக்கம்' என்று கூறப்படும் "பிரபோத சந்திரோதயம்' என்ற நூலையும் தமிழில் ஆக்கித் தந்தார் என்று கூறுவார்கள். பிரபோத சந்திரோதயம் என்பது ஒரு வடமொழி நாடக நூல். வைதிக சமயத்துக்கு எதிரான பெளத்தம், சமணம், சார்வாகம் போன்ற பண்டைத் தத்துவங்களை மறுத்து : அவற்றைக் கேலி செய்வதற்காக எழுதப்பட்டது. இதனை இயற்றியவர் கிருஷ்ண மிசிரர் என்பவராவர். அழிக்கப் பட்டும் மறைக்கப்பட்டும் போன இந்திய நாட்டின் பண்டை உலகாயத (பொருள் முதல்) வாதக் கோட்பாடுகளைச் சுட்டிக் காட்டும் எச்சமச்சங்களைக் காணக்கூடிய நூல்களில் இந்த நூலும் ஒன்றாகும். எனவே தத்துவார்த்த உலகில் இதற் கொரு தனி இடம் உண்டு. நாடக உருவிலே அமைந்த இந்த வடமொழி இலக்கியத்தைக் காப்பிய வடிவில் தமிழாக்கித் தந்தவர் தான் திருவேங்கட நாதையன் என்பார்கள். இந்த நூல் 2012 விருத்தப் பாக்களால் ஆனது. திருவேங்கட நாதையனின் குமாரர்களில் ஒருவர் தான் பணவிடு தூ தின் பாட்டுடைத் தலைவரான வேங்கடேசன், (இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்; பிரபோத சந்திரோதயத்தைத் தமிழாக்கியவர் யார் என்பது குறித்து, இலக்கிய உலகிலே பல்வேறு கருத்துக்கள் உண்டு. திருவேங்கட நாதையனின் வேண்டுகோளுக்கிணங்க, வைத்திய நாத தேசிகரே இந்த நூலை இயற்றினார் என்பர் ஒரு