பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலர். வேறு சிலரோ தேசிகரின் ஆலோசனையோடும் உதவி யோடும் திருவேங்கடநாதையனே இதனை இயற்றினார் என்பர். இரண்டு பேரும் சேர்ந்து தான் இயற்றினார்கள் என்பாரும் உண்டு. இத்தனைக்கும் மேலாக, இந்த நூலை இவர்கள் இரு வருமே இயற்றவில்லை என்றும், வைத்தியநாத தேசிகரின் மாணவராக இருந்த, பணவிடு தூதின் பாட்டைத் தலைவரான வேங்கடேசனே அதனை இயற்றினார் என்றும், தந்தையின் பெயாரும் தன னின் பெயரும் கிட்டத்தட்ட ஒன்று போலி ருப்பதால், த ையன் எழுதிய நூலையே தந்தை எழுதிய 'நாலெனக் கருதிவிட ஏதுவாயிற்று என்றும் வாதிடுகிறவர் களும் உண்டு. இந்த 'வேடிக்கைக்குள்ளே யெல்லாம் நாம் தலையைக் கொடுக்க வேண்டியதில்லை. என்றாலும் இலக்கிய உலகில் வேங்கடநாதையனே அந்த நூலை இயற்றித் தந்தார் என்ற கருத்தே பெரிதும் நிலவி வருகின்றது. இந்த நூலை பார் இயற்றியிருந்த போதிலும், தத்துவ உலகிலே இடம் பெறும் "பிரபோத சந்திரோதயத்தைத் தமிழாக்கித் தந்துவிட்ட வரையில் நமக்கு லாபம்தானே!) பணவிடு தூதின் மூலம் திருவேங்கட நான் தயனுக்கு ஆறு புதல்வர்கள் எனவும், அவர்கள் முறையே சொர்ண கிருஷ் சுணன், வேங்கடேசன், மணிவண்ணப் பெருமாள், ராஜகோ பாலகன், கனகசபாபதி, வேங்கடராமன் என்போராவர் எனவும் நாம் அறிந்து கொள்கிறோம். இவர்கள் எல்லோருமே அரச கருமங்களிலேயே பணியாற்றி வந்திருக்கிறார்கள். இவர்களில் இரண்டாவது புத்திரனான வேங்கடேசன், என்பவரே பணவீடு தூதின் பாட்டுடைத் தலைவர். இவர். தமது சகோதரர் அனைவ ரையும் காட்டிலும் அதிகப்படியான பேருக்கும் புகழுக்கும் ஆளானவர், பணவிடு தூது வேங்கடேசனை,