பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 தார் என்ற காரணத்தையும் நாம் புரிந்துகொள்ள முடியும், இல்லையா? கதவை த இஇன்ப த ஆ ( பிண்: தென்பாண்டிச் சீமையான திருநெல்வேலியில் பாட் டுடைத் தலைவரான வேங்கடேசன், ராஜப்பிரதி நிதியாக "அரசு செலுத்தி வருகிறார். அவர் தினசரி இரவில் ஆடம் பரமும் அலங்காரமும் படாடோபமும் மிகுந்த முறையில் பவனி வருவது வழக்கம். அவ்வாறு அவர் பவனி வந்து, பின்னர் 'அரங்க விலாசம்' என்ற தமது அரண்மனைக்குள் செல்வார். இந்தப் பவனியைக் கண்டுகளித்த புலவர் வேங்கடேசனின் கொலுவிருக்கையை நோக்கிச் செல்கிறார், சென்று, வேங்கடேசனின் புகழைப் பலபடப் பாராட்டி, அவர்மீது தாம் இயற்றிவந்த வண்ணத்தை அரங்கேற்று கிறார். அதனைக் கேட்டு மகிழ்ந்த வேங்கடேசன் அவருக்குப் பல் பரிசில்களும் தந்து, பண உதவியும் செய்கிறார். பின்னர் புலவர் வேங்கடேசனின் திருப்பணியினால், திருநெல்வேலியில் கோயில் கொண்டுள்ள சுவாமி நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மைக்கும் நடைபெறும் திருக்கல்யாண வைபவத் திருவிழாக் காட்சியைக் காணச் செல்கிறார், ஆண்டவனின் கல்யாணக் காட்சியைக் காணப்போன புலவருக்கு அங்கே வேறொரு காட்சி காத்திருக்கிறது. அந்தத் திருவிழா வைப் வத்தில், ஆண்டவனின் திருச்சந்நிதியில் திருத் தட்டை ஏந்திக் கொண்டு நிற்கும் பூங்கோதை என்ற ஒரு தேவரடியாளின் கீது--கணிகையின்மீது--புலவரின் கண்கள் லயித்துவிடு கின்றன. கண்களோடு மனமும் அவள் பால் சென்று விடு கின்றது. அவளை அடைந்தாலன்றி, தமது தாபம் தீராது என்று உணர்கிறார் புலவர்! எனவே அவளைத் தம்மோடு கூட்டிவைக்குமாறு வேண்டி, தாம், வேங்கடேசனிடம்