பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நிகழ்ச்சியை எழுதுவதுதான் எதார்த்த, இலக்கிய மா? அதுதான் ரியலிஸமா? {Realiser) அப்படியானால், "LATக்காவது கழகப்பழம், உ.பருப்பாவது துவரை!' என்ற இலக்:*காமல்லவா எதார்த்தவாதமாகிவிடும்?" என்றெல் லாம் ஆத்திரப்படத் தோன்றும். கதையம்சம் என்று எடித்துக்கொண்டால், பணவிடு தாதின் கதை உப்புச் சப்பற்ற, உயிரற்ற உணைர்ச்சியற்ற பிண்டம் தான். மறுப் பதற்கில்லை, ஆ65 **வாழக்கையில் இத்தகைய உேப்புச் சப்பர் 7) நிகழ்ச்சிகளும் நடைபெறுவது இயற்கைதானே , அதைச் சுத்திகரிப்பதில் தவரா , என்ன இருக்கிறது? அதுவும் வாழ்க்கையை ஒட்டி.துதானே!” என்றுகூட, சிலர் எதார்த்த வாதம் பேசலாம், அப்படிப் பேசினால் இந்தக் கதையவே காணப்படும் எதார்த்தவாதம் பச்சையான {அதாவது ஒளிவு மறைவற்ற) எதார்த்தமல்ல, மாறாக பச்சை வேட்டான (அதாவது அரை வேக்காடான) எதார்த்த வாதம் என்றே சொல்லவேண்டும்! வாழ்க்கை யைப் பிரதிபலிப்பதுதான் கலை என்பதால் தினசரிப் பத்திரி கையில் அன்றாடம் வெளிவரும் செய்திகள் எல்லாம் இலக் சிகிசம் ஆகிவிடாது. செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன? இலக்கியம் சிருஷ்டிக்கப்படுகிறது. எனவே எந்த ஒரு எதார்த்தமான, கிளாழ்க்கையை ஒட்டிய நிகழ்ச்சியும் மனித இதயம் என்ற வாலைக்குழாயில் புகுந்து அமுதரசம்போல் வடித்தெடுக்கப் பெறவேண்டும். வாழ்க்கையில் சுவையற்ற நிகழ்ச்சிகள் இருக்கலாம்; அவற்றைச் சித்திரிப்பதில் சுளை இருந்துதான் ஆகவேண்டும். பருத்திக்கொட்டையை ஆட்டுரலும்தான் ஆட்டி அரைத்துக்கொடுக்கின்றது: மாடும்தான் அதனை அசை போட்டுத் தின்கிறது. ஆனால் ஆட்டுரலும், மாட்டின் மடுவும் ஒன்றாகிவிடுமா? ஆம். கலை என்பது பருத்திக்கொட்டையை ஆட்டியரைத்துச் சாறு . பிழிந்து கொடுக்கும் வித்தையல்ல; அதனைச் சீரணித்து, பாலாகச் சுரந்து தரும் சிருஷ்டி சக்தி அது!