பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 அப்படியென்றால் பனாவிடு தூது கலையம்சமோ இலக் கியத் தரமோ இல்லாத நூல் தானா? இல்லை. சொல்லப் போனால், கதையம்சம் மிக்கிருந்த தந்திவிடு தூது என்ற நாலைக்காட்டிலும் இலக்கியத் தரமும் கலையம்சமும் மேலோங்கி நிற்கும் நூல் தான் அது. ஆசிரியர் அந்தக் கலையம்சத்தை எப்படிச் சிருஷ்டிக்க முனைந்திருக்கிறார். என்பதுதான் பிரசினை. பொதுவாக, ஏனைய தாது நூல்களில் நூலாசிரியர் பாட்டுடைத் தலைவரையும், தாம். தூது விடுக்கும் பொருளையும் குறித்துச் சில வரிகளில் பாடி முடித்துவிட்டு, பின்னர் தாம் சொல்லவந்த கதையையும் அதிலே வரும் சம்பவங்களையுமே சுவையாகவும் விரிவாக வும் சொல்லிக்கொண்டு போவார்கள். ஆனால் பணவிடு தூது ஆசிரியரோ கதையம்சத்தில் கவனம் செலுத்தவே இல்லை. ஏனெனில் அவர் அந்த நூலை எழுதியதற்குக் காரணமே எந்தவொரு சுவாரசியமான கதையையும் சொல்லி முடிப்பதற்கல்ல. மாறாக, அவர் எந்த ஒரு பொருளைத் தூதுவிடுக்கும் பொருளாகக் கொண்டாரோ. அந்தப் பொருளான பணத்தின் சக்தியையும், மகிமைEை யும், தன்மையையும் ஆணித்தரமாக எடுத்துரைப்ப தொன்றே அவரது முழுமுதல் நோக்கமாக இருந்திருக் கிறது. அதனால் தான் அவர் பிரமிக்கத் தக்க சம்பவங்சுளும் திருப்பங்களும் மிகுந்த எந்தவொரு கதையம்சத்தையும் நாடி நிற்கவில்லை. இதனை அவர் பணத்தைப் பற்றிப் பாடியுள்ள பாடல் அளவைக்கொண்டே தெரிந்து கொள்ளலாம். பணவிடு தூ தில் மொத்தம் 744 பாடல் வரிகள் உள்ளன; இவற்றில் 490 வரிகள், அதாவது பாதிக்கும் மேற்பட்ட வரிகள், தூதுப் பொருளான பணத்தின் பல்வேறு சக்திகளையும் தன்மைகளையும் புலப் படுத்துவதற்கே பயன்படுத்தப் பட்டுள்ளன. தூதுப் பொருளைப் பற்றியே இவ்வளவு தூரம் பாடினால், சலிப்புத் தட்டிவிடாதா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் பண