பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. வற்றையும் அவர் குறிப்பிடுகிறார். அவற்றைப் பற்றி யெல்லாம் நினைவு கூர்ந்து முடித்த பிறகு, கோலம் பல்எடுத்து, கோவே! நீ செய்யும் இந்த்ர ஜாலம் பிறர் அறியத் தக்கதோ? என்ற கேள்வியோடு, பக்கத்தின் சக்தியைப் பாடுகிறார். பணத்தின் சக்தி என்ன சாமான்பம் ஆனதா? --ஞாலமிசை மேரு அணுவாக்கி விடுவாய்! அணுவை ஒரு பார மக' மேரு எனப் பண்ணுவாய்!- ஈழமின் றில் வெட்டுவரய்! வெட்டுதலை மீட்பாய்! வளிந்து இரகக் ஐட்டுவாய்! கட்டும் கயிறு அவிழ்ப்பாய்!--- கிட்டும். உறவில் பகை விளைப்பாய்! உட்பகையாம் பண்டைக் . குறையைத் தவிர்த்து உறவு கொள்வாய்!-துறைவிட்டுக் காடு நாடாக்குவாய்! கண் விழித்து மூடுமுன்னே நாடு காடாக்குவாய் நம்பி நீ! ஆம். பணம் பத்தும் செய்யும். கொலையைச் , செய் யவும் தூண்டும்; கொலையுண்ண இருந்தவனையும் காத்து ரட்சிக்கும்; சிறையில் மாட்டவும் செய்யும்; சிறை மீட்க வும் செய்யும்; உறவைக் கொடுக்கவும் , செய்யும்; அதனைக் கெடுக்கவும் செய்யும். இத்தனைக்கும் மேலாக, காட்டை நாடாக்கிக் கழனிகளையும் தொழிற்சாலைகளையும் தோற்று விக்கவும் செய்யும்; கண் மூடி விழிக்கும் நேரத்தில் யுத்த வெறிகொண்டு அவற்றைக் கட்டாந்தரையாக ஆக்க வும் செய்யும் இல்லையா? .