பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் 'தின கரன்” பத்திரிகையின் சஞ்சிகைப் பகுதியில் சில ஆண்டு களுக்கு முன்னால் தொடர்ந்து எழுதி வந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தையளித்த அதன் ஆசிரியராகப் பணி யாற்றிய அன்பர்கள் வி. கே, பி. நா தன், க. கைலாசபதி ஆகியோருக்கு நான் நன்றிகூறக் கடமைப்பட்டவன். இப்போது 'சமுதாய இலக்கியத்தை உருவாக்கும் சமயத்தில், இந்நூல் மொத்தத்தில் ஒரு முழுமையும் ஒருமையும் பெறுவதற்காக,... முன்னர் எழுதியவற் றில் சேர்ப்பன சேர்த்தும், விடுப்பன விடுத்தும் திருத்தம் செய்து, முற்றிலும் திரும்ப எழுதியுள் ளேன். இந்த நூல் ஓர் இலக்கிய அறிமுகம்தான் என்றாலும், அந்த அறிமுகத்தைச் சார்ந்து, அதனை யொட்டிய இலக்கிய ஆராய்ச்சி, விபச்சன்இ இலக்கியத் துறை பற்றிய எனது கருத்துக்கள் ஆகியவற்றையும் பிணைத்தே எழுதியுள்ளேன். எனவே இந்நூல் ஓர் இலக்கிய விமர்சனப் படையலாகவும் அமைந் துள்ளது. எனது ஏனைய நூல்களுக்களித்த' ' விர வேற்பை இலக்கிய ரசிகர்கள் இதற்கும் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ரகுநாதன்