பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இந்த வளர்ச்சி மனப்போக்கை ‘பார்வதி பி.ஏ.’ என்ற கதையில் நாம் தெளிவாகக் காண்கிறோம். ‘பார்வதி பி.ஏ.’யில் விரச உணர்ச்சியே இல்லை. அறிவு உணர்வுகளே தலைதூக்கி நிற்கின்றன. சமூகப் போராட்டங்களே வேரூன்றி உள்ளன. இஃது அவருடைய தலையாய படைப்பு. தமிழர்கள் தவறாது படிக்க வேண்டிய படைப்பு.

“ரோமாபுரி ராணிகள்” படைப்பிலும் மிகச் சிறந்த இனிய தத்துவங்களை எடுத்துக்காட்டத் தவறிவிட வில்லை. நோயை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. மருந்தையும் எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் வெறுப்பு என்ற நோய் பிடித்த விமர்சகர்கள் அவர் மருந்தைக் கண்டு காட்டியதை எடுத்துக்காட்டத் தவறி விட்டார்கள்.

“பெண்களுக்கு சரியான சமத்துவமும், சுதந்திரமும் வாய்ப்பும், வசதியும் கிடைக்கும் வரை அவர்களுடைய அழகு ஆபத்தாகவே முடிகிறது. ஆனாலும் ஏழை அபலைகளாக இருக்கிற பெண்கள் இந்த ஆயுதத்தை உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் தவிக் கின்றார்கள்” என்று எழுதிக் காட்டியுள்ளார்.

“ரோமாபுரி ராணி”களில், பெண்களைச் சம உரிமையுடன் கருதாமல் இன்பத்துக்குரிய எண்ணரிய பொருள்களோடு கருவி போலக் கருதுகிற மனப் போக்கை அண்ணா, பார்வதி பி.ஏ.,யில் இடித்துரைக்கின்றார்.

அறிஞர் அண்ணா சமயத்துறையில் புரியாத புதிராக இருக்கிறார். இறைவனைப் போலவே அவரும் கேள்விக் குறியாகவே திகழ்கிறார். இறைவனை எப்படி ‘இப்படியன் இவ் வண்ணத்தன்’ என்று எழுதிக்