பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 99

காட்ட முடியாது என்று சொன்னார்களோ, அதுபோலவே அறிஞர் அண்ணாவும் விளங்குகிறார்.

இஃது ஒரு பொதுவான உண்மையே. ஆனால் உண்மை அப்படியல்ல. அண்மைக் காலமாக அவரி அதனைத் தெளிவாக வெளிப்படுத்தி வருகிறார். “சமயம் வேண்டுமா, வேண்டாமா என்பது அல்ல எங்கள் கேள்வி. அது எப்படியிருக்க வேண்டும் என்பதே எங்கள் கேள்வி” என்று உரத்த குரலில் கூறி வருகிறார்.

அண்மைக் காலமாக என்பதால் வாக்குகளுக்காகவும் ஆட்சிக்காகவும் என்று சிலர் கருதக்கூடும். இது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய ‘புராண - மதங்கள்’ என்ற புத்தகத்தை உய்த்துணர்ந்து படிப்பவர்கள் இதனை உணர முடியும். புத்தரைப் பற்றி ‘பார்வதி பி.ஏ.’யில் குறிப்பிடும் இடத்தில் அடியிற் கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“இன்பத்தை மதிக்க மறுத்ததுடன் போகப்படு குழியின் இலாபச் சுழலும் தாம் செல்லும் வழியிலே காணப்பட்ட காலை அவைகளிலே இடறி விழாமல் இன்பம் - நிரந்தர இன்பம் - துன்பத்துடன் பிணைத் திருக்கும் இன்பமல்ல - இணையற்ற - எல்லையற்ற - இன்பம் எது? எங்கேயிருக்கிறது? எங்கனம் பெற முடியும்? என்று கண்டுபிடிப்பதிலே காலத்தைச் செல விட்டார்.”

என்று எழுதியுள்ள பகுதிகள் தெளிந்த சமயத் தத்துவத்தை விளக்குவனவாகவில்லையா? ‘ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே’ என்ற மணிவாசகரின் வாக்கு இதனை நமக்கு நினைவுக்குக் கொண்டு வரவில்லையா?