பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 19
 

விலங்குகளுக்கும் இடியே உள்ள தகுதி வேறுபாட்டை அறிவினால் மட்டும் நிர்ணயித்தல் கூடாது.

மனிதன் கடைப்பிடிக்கும் நடைமுறை, செயல்முறைகளே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவனவாகும், இந்த அளவைக்கு ஈடுகொடுக்கும் மாந்தர் எங்குளர்? யார் அவர்? ‘பஞ்சும் பசியும்’ ஆசிரியர் தொ.மு.சி. ரகுநாதன், அறிவுப் புரட்சி பற்றி விவரிக்கிறார் கேளுங்கள்.

அறிவுப் புரட்சி, அறிவுப் புரட்சி என்று அடித்துக் கொள்கிறாயே, அறிவில் மட்டும் புரட்சி ஏற்பட்டால் போதுமா? இப்போது என்னை எடுத்துக்கொள், எனக்கு இந்த மூட நம்பிக்கைகளில் ஒன்றும் நம்பிக்கை இல்லை. மனிதனை மனிதனாகத்தான் நேசிக்கிறேன். இதனால், என் வாழ்க்கை மேம்பட்டு விட்டதா?

சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வதால் மட்டும் ஒருவன் சொர்க்கத்துக்குப் போய்விட முடியுமா? அறிவு வேண்டும்; அந்த அறிவின் கொள்கை வெற்றி பெற நடைமுறைப் போராட்டம் வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது என்று ஓர் உரையாடலில் கூறுகிறார். இது நமது கவனத்திற்குரியது.

அறிவு, உணர்வைத்தான் தரமுடியும். ஆனால், வாழ்வியல் நடைமுறைதான் வெற்றியைத் தரமுடியும். கொள்கைபும் நடைமுறையும், சிந்தையும் செயலும் ஒன்றுபட்டால்தான் காரியங்கள் நிறைவேறும் துன்பம் அகலும் இன்பம் வந்தடையும்! அறிவை, உணர்வை நடைமுறைக்குக் கொண்டு வரும்பொழுது மானிடத்திற்கு உழைப்பு அறிமுகமாகிறது.