பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அனுபல்லவியாகத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லி வந்திருக்கிறார்கள்!

ஆனால், உழைத்தவர்கள் முன்னேறியிருக்கிறார்களா? கழனியில் உழும் உழவன், உழைப்பாளி அவன் நியாயவிலைக் கடைக்கு அரிசி வாங்கப் போகாமல் இருக்கிறானா? இலவச அரிசி வாங்காமல் இருக்கின்றானா?

மாடுகள் வளர்த்துப் பாலினைக் கறந்து உலகுக்கு வழங்கும் தொழிலாளியின் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பால் அறிமுகம் உண்டா? “கொக்குபோல் பால்” என்ற கதையைக் கேட்டிருப்பீர்கள் அதுபோலத்தான் அவன் பிள்ளைகளின் நிலை!

நில உலகம் முழுதும் ஓங்கி உயர்ந்திருக்கும் மாளிகைகளைக் கட்டித் தந்த கொத்தனார்களுக்கு வீடு உண்டா? ஏன் இந்த அவலம்!

அறிஞர் அண்ணா, இந்தத் துன்பம் நிறைந்த உழைப்பாளிகளின் வரலாற்றை “செவ்வாழை” என்ற கதையில் விளக்கும் பாங்கு, நினைக்கத்தக்கது உணரத்தக்கது. இதயமிருந்தால் இத்தகைய கொடிய நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைவீர்!

இதோ, அண்ணாவின் படைப்பு! “செவ்வாழை”யின் ஒரு பகுதி:

“நம்ம கொல்லையிலே நாம் வளர்த்ததல்லவா!” —என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும் அவன் மனக்-