பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

கொள்ளைக்கு அதிகாரமும் துணையாக நிற்கிறது. இந்த இழிநிலையை பட்டுக்கோட்டையின் வார்த்தைகளிலேயே கேளுங்கள்.

“ஆசைக்கு நீதி இரையாகுதடா! அன்பை
அதிகார வெள்ளம் கொண்டு போகுதடா”

இன்றைய சமூகப் போக்கு நியாயங்களை எடுத்துச் சொல்லுவது மாதிரியும் இல்லை! இன்று எங்கு பார்த்தாலும் காசும் உழைப்பும், காசும் கண்ணியமும் என்று காசுடன் இணைத்துத்தான் எதுவும் மதிப்பிடப்படுகிறது! இது பெரும் பிழை!

மந்திரங்களைக்கூடி காசுக்கு ஏற்றவாறு குறைவாகக் கொடுத்தால் சுருக்கியும், நிறைய கொடுத்தால் நீட்டி முழக்கியும் சொல்லும் புரோகிதர்கள் இருக்கிறார்கள்! இது தவறு என்று விளக்க, சொல் விளங்கும் பெருமாள் “வெள்ளையங்கி”யில் முயற்சி செய்கிறார். .

‘பெரிய வாத்தியார்’ காசுக்கேற்றவாறு மந்திரத்தைக் கூட்டியும் குறைத்தும் சொல்ல இணங்கியதை இராமையர் நினைந்து சொல்லுவதாக, சொல்விளங்கும் பெருமாள் எழுதுகிறார்.

“நீங்கள் நியாயமாக நடங்கள் என்று சொன்னால், மற்றவர்கள் நியாயமாக நடக்கவில்லை என்று கூறுவது அதற்குப் பதிலாகிவிடாது” என்பது இராமையர் பெரிய வாத்தியாரைப் பற்றி நினைந்து சொல்வதாகும். இன்று நாம் நம்முடைய சமூகத்தில் அடிக்கடி கேட்பது இத்தகைய வாதத்தைதான்.

ஒருவர் செய்த தவறுகளை எடுத்துக்காட்டினால் “நீங்கள் செய்யவில்லையா?” என்று மிக்குயர்ந்த இடத்-