பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 51

என்று பாரதியால் தமிழ் ஏற்றம் பெற்றது என்று பாரதிதாசன் பாராட்டினான்!

பாரதியின் கவிதைகளில் கவித்துவம் உண்டு: உணர்ச்சி உண்டு. பாரதி, உரைநடையில் கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளான்.

பாரதியின் உரைநடை இலக்கியங்களில் தெளிவான சிந்தனை, கொள்கை, கோட்பாடுகள் இடம்பெற்றுள்ளன. பாரதியின் நெடிய கதைகள் சுவைத்துப் படிக்கத்தக்கன. அவற்றுள் சில பகுதிகள் கிடைக்காதது ஒரு பெரிய குறை!

பாரதியின் கவிதைகளிலும் சரி, உரைநடைகளிலும் சரி ஷெல்லி, விவேகானந்தர், தாயுமானார் போன்றவர்களின் தாக்கங்கள் நிறைய உள்ளன. அவர்களை ஆதரித்தும் எதிர்த்தும் பாரதி எழுதுகிறான்.

ஆனாலும் பாரதிக்கு அவர்கள்பால் உள்ள ஈடுபாடு மிகுதி. அளப்பரிய மதிப்புணர்வும் உடையவனாகவே வளர்ந்திருக்கிறான். தாயுமானார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.

பாரதி, இந்தியா, பாரததேசம் என்றெல்லாம் கூறி மகிழ்கிறான். ‘இந்தியா’ - என்றே ஒரு பத்திரிகையும் நடத்தினான். பாரதி நடத்திய பத்திரிகைகள் பல. ஆனால், போதிய அதரவு இல்லாமல் அல்லற்பட்டான்!

ஆயினும் கடைசி வரையில் ஊனில் உயிரும், உயிரில் உணர்வும் சுதந்திர வேட்கையுடையவனாகவே இருந்தான்! “எல்லோரும் இந்தியா” என்று பெருமை