பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பாரத நாட்டின் சுதந்திர மீட்சி பாரத நாட்டின் சராசரி மனிதக் கூட்டத்தினாலேயே நடைபெறும் என்பதும் பாரதியின் கருத்து; நம்பிக்கை பாரத நாட்டின் விடுதலைப் போருக்கு, பரம்பொருளின் ஆதரவுண்டு என்றும் நம்பிக்கை ஊட்டுகிறான் பாரதி!

ஆனால், பரம்பொருளின் ஆதரவு பெற ஒரு நிபந்தனையையும் பாரதி விதிக்கத் தவறவில்லை. அது என்ன நிபந்தனை? “பாரத புத்திரர்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களைக் கட்டிச் சுருட்டி வீட்டிற்குள் வைத்துவிட்டு, தேச மாதாவின் சேவையில் தொண்டு பூண்டு வந்தால் கட்டாயமாக பகவான் அருள் தருவான்” என்பதே அந்த நிபந்தனை: நம்பிக்கை!

பாரத நாட்டு மக்களிடம் வேற்றுமைகள் பெருகி வளர்ந்தமையை, திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டுவதை நமது நாட்டு மக்கள் சென்ற காலத்தில் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏன்? இன்று வரையிலும் உணர்ந்து ஒழுக முன்வரவில்லை என்பது உண்மை.

ஆயினும் வேற்றுமைகள் மறக்கப்படுதல் வேண்டும்; ஒன்றுபடுதல் வேண்டும், அனைவரும் நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்று வளர்ந்து வந்த உணர்வை “நவீன உணர்ச்சி” என்று வியந்து பாராட்டி வரவேற்கிறான் பாரதி!

பாரதி வாழ்ந்த காலத்தில் - சுதந்திரப் போராட்டிக் காலத்தில் தேசபக்தி வளர்ந்து வந்தது! பாரதி, கடவுள் பக்தியையே மடைமாற்றி, தேச பக்தியாக்க விரும்பினான்.

பிரகலாதன், துருவன் ஆகியோர் விஷ்ணுவினிடத்தில் காட்டிய பக்தியைப் போல் நாம் நமது தேசத்தினிடத்தில்