உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 57

சமுதாய விரோதமானவற்றையும் வெறுக்கிறான். புதிய மதம் உருவாக்க முயலுகிறான்; புதுவிதிகள் செய்கிறான்.

பாரதி, தன் காலத்தில் நிலவிய இந்து நாகரிகம் கெட்டுவிட்டது என்று எழுதுகிறான்; உண்மையை ஒப்புக்கொள்கிறான். பாரதி ஒப்புக் கொண்ட உண்மையை ஹிந்து மடாதிபதிகள் ஒத்துக்கொண்டிருந்தால் வரலாறு மாறியிருக்கும்.

கெட்டுவிட்டி இந்து நாகரிகத்தை சீர் செய்ய ஹிந்து மடாதிபதிகள் என்றுமே முன்வர மாட்டார்கள் போலத் தெரிகிறது. உண்மையில் கூறப்போனால் ஹிந்து மடாதிபதிகள் பலராகப் போனதாலும் அவர்களுக்குள்ளேயே செல்வாக்குப் போட்டிகள் நிலவுவதாலும் யார் ஹிந்து மதக் காவலர் என்பதே புலனாகவில்லை.

இதனைப் பாரதி, “ஹிந்து சம்பிரதாயமாகிற குளத்துக்கு தர்மகர்த்தா இன்னாரென்பதே வெளிப்படையாகத் தெரியவில்லை. அடியார்கள் கூடித் தர்மகர்த்தா இன்னாரென்பதை முதலாவது நிச்சயப்படுத்த வேண்டும். பிறகு, தெய்வ சந்நிதியில் அவர்களுடைய குணம் திருந்தி நடிக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் ஒத்து எழுதுகிறான். பாரதி காலத்திலும் இது நடக்கவில்லை. இதுவரையிலும் நடக்கவில்லை. இனிமேலும் நடக்குமா? வரலாறுதான் கூறவேண்டும்.

பாதி ஹிந்து தர்மத்தைச் சுத்தப்படுத்தி ஆதரிக்கத்தக்கது எது என்றும் இந்த விஷயத்தில் மக்கள்,

ச-4