பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அஜாக்கிரதை காட்டக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறான்.

ஹிந்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், தேவையான அளவு இல்லை. இதனை, பாரதி “விழித்தால் நன்றாக விழித்துவிட வேண்டும். நடிந்துகொண்டு தூங்குவோர் உண்மை அறிய மாட்டார்கள்” என்று எழுதியுள்ளபடி ஹிந்து சமுதாயம் விழித்தெழ வேண்டும். இது நமது பிரார்த்தனை; வேண்டுகோள்!

ஹிந்து சம்பிரதாயத்தில் நிலவிய தீண்டாமையை பாரதி கடுமையாகச் சாடுகிறான். “பஞ்ச கோனக் கோட்டை” என்ற தத்துவார்த்தக் கதை மூலம் தெளிவாக விளக்குகிறான். அந்த கதையைக் கேளுங்கள்!

பாரத தேசத்தவராகிய நாம் பஞ்சகோணக் கோட்டை. கற்சுவர்கள் நாலும் மேலான சாதிகள்! மண்சுவரே பஞ்சமர் என்ற ஐந்தாம் சாதி. கோட்டையைச் சுற்றியுள்ள அகழி சுதேசி அபிமானம்! பஞ்சமர்களை அநாதரவும் கொடுமையும் நிறைந்த முறையில் நாம் நடித்தி வரவில்லையா? இது நியாயமா? இந்த ஒடுக்குமுறை சுதந்திரப் போராட்டித்துக்கு அனுசரணையாக அமையுமா? என்றெல்லாம் வேதனைப் பட்டு எழுதுகிறான்.

“கடவுள் எல்லோரையும் சமமாகவே படைத்தான். கடவுள் முன்னிலையில் சாதி வித்தியாசம் நிற்குமா? பஞ்சமர்களை நாம் நடத்திய கொடுமைகளுக்கு ஈடாக நம்மை ஆங்கிலேயர்கள் துன்புறுத்துகின்றனர்.