பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலாச்சி இலக்கியங்கள் 口 67

“தவத்தாலும் பரிபூர்ணத் துறவாலும் ஏற்படும் அசையாத மனோ தைரியத்தையும் எல்லையற்ற அன்பையும், எல்லா உயிர்களிடத்தும் ஆன்ம புத்தியையும் வைத்துக் கொண்டு இல்வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இந்து மதத்தின் முடிவான தீர்மானம்” - என்று பாரதி எழுதுவதுடன், தனது வாதத்துக்கு அரணாக சந்நியாசிகளின் பரமநாதனாகிய சிவன். பார்வதியை இடப் பாகத்தில் கொண்டருளியதையும் தவமுனிவர் விசிஷ்டர் அருந்ததியு கடி வாழ்ந்த வாழ்க்கையையும் எடுத்துக்காட்டுகிறான்.

துறவை, “விலங்கு” என்று பாரதி வர்ணிக்கிறான். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று கவிதையில் அறைகூவல் விடுத்த பாரதி, உரைநடையில், மகளிருக்கு எதிரான சமூகத்தை நையப் புடைக்கிறான்.

நமது மகளிருக்கு கல்வி போதிக்க வேண்டும், என்று வலியுறுத்துகிறான். அதுமட்டுமா? வருங்கால மேதைகளை உருவாக்கும் தகுதி மகளிருக்கே உண்டு. என்பது பாரதியின் கருத்து; நம்பிக்கை!

நாட்டில் நல்லன நடக்க வேண்டுமா? பெரிய பெரிய காரியங்கள் நடக்க வேண்டுமா? எடுக்கும் காரியங்கள் யாவும் கை கூடிவர வேண்டுமா? மகளிரின் மனோ நிலை வளர்ந்து அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் ஒன்றும் நடவாது; வெற்றியும் கிடைக்காது.

பாரதி, நிவேதிதா தேவி கூறியதாக எடுத்துக்காட்டி எழுதுவது, “ஐயோ, மாதர்களை இருட்டிலே தள்ளிவிட்டு அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைமைக்கு வந்துவிட முயல்வது வீண் முயற்சி!