சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 71
எழுமின்! எழுமின்! ஆட்டு மந்தையில் பழகிய சிம்மமாகி விடாதீர்கள்!” இது பாரத மக்களுக்கு பாரதியின் வேண்டுகோள்!
நமது நாட்டுக்குப் பயமற்றவர்கள் தேவை, அறிவாளிகள் தேவை: பலசாலிகள் தேவை என்று பாரதி உணர்கிறான்; உணர்த்துகிறான்! இளைஞர்கள் வலிமை பெற சிலம்பு, கஸ்ரத், கர்லா முதலியன - பாட சாலை அமைத்து, கற்றுக் கொடுக்கும்படி கிராம சபையினரை வேண்டி கேட்டுக் கொள்கிறான்.
அதற்கு கைமாறாக ஓர் ஆண்டுக்குப் பத்திரிகை இலவசமாக அனுப்புவதாகவும் எழுதுகிறான். கேடு களுக்கெல்லாம் காரணமான பயத்திலிருந்து விடுதலை பெற்று வலிவும் பொலிவும் பெற்று விளங்கும்படி இளைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
சரீர வாதனை, இழப்பு, பசி, துன்பம் முதலியனபற்றி, கவலைப்படாமல் துணிவுடன் வாழ்க்கை நடத்தும் பயிற்சியும் முயற்சியும் இளைஞர்களுக்குத் தேவை என்பது பாரதியின் கருத்து. இந்தக் கருத்தினைப் பல நடைமுறை உதாரணங்களுடன் விளக்குகிறான்.
“மனத் துணிவற்ற சாதியினர் மண் சுமக்கக் கூட, தகுதியாக மாட்டார்கள்” என்பது பாரதியின் வாக்கு சோதனைகளும் துன்பங்களும் துயரங்களும் மனிதனை வளர்ப்பனவேயாம்! நிலத்தில் அடிக்கப்படும் பந்து எழுவதைப் போல மனிதன் எழுந்து அயர்வில்லாமல் உழைத்தால் உயரலாம். இது உறுதி. இதுவே பாரதியின் தடம்!