பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 73

ஆனந்தரங்கம் பிள்ளை, பிரான்சு நாட்டுத் தலைவன் டூப்ளேக்கு, விளக்கு போலவும், ஊன்றுகோல் போலவும் விளங்கினார்.

பாரதி, துறவைப் பல இடங்களில் கண்டிக்கிறான். துறவு வாழ்க்கையை மறுதலிக்கிறான். ஏன்? வாழ்க்கையை மாயை என்று கூறுவதையும் பாரதி மறுக்கிறான். ஆன்மாவின் வாழ்க்கை நிலையானது; சாசுவதமானது என்று பாரதி போதிக்கிறான்.

நமது பாரத நாட்டில் சில நூற்றாண்டு காலமாகவே துறவைப் பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள். கண்டவன் எல்லாம் ஞானம் பற்றிப் பேசுகிறான். வயிற்றுப் பிழைப்புக்காக - சில காசுகளுக்காக உடலையும் ஆவியையும் விற்கத் துணிபவன் கூட ஞானம் பேசுகிறான்.

வாழ்க்கை மாயை என்கிறான். “எல்லாம் மாயை, இவ்வுலகமே பொய், கூடிணத்தில் அழிவது இவ் வாழ்க்கை” என்று தனக்குத் தெரியாதவைகளைக்கூட கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பக் கூறுகிறான்.”

இந்த பொய்யை பாரதி நம்ப மறுக்கிறான்; ஏற்க மறுக்கிறான். வாழ்தலைப் பற்றிய வேட்கையைத் தூண்டி வளர்க்க முயற்சி செய்கிறான். இந்த உலகம் நிலையானது என்று நம்பி வாழ்ந்து இந்த மண்ணையே சொர்க்கமாக்க, பாரதி நம்மை அழைக்கிறான்.

இந்த உலகம் நிலையானது. இங்கு பாங்குற வாழ்தலே சிறப்பு. செத்த பிறகு சிவலோகம் யாருக்கு

ச-5