பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வேண்டும்? இங்கு அமரர் சுகம் வேண்டும் இது பாரதியின் ஆசை.

பாரதி, திருவள்ளுவரைப் பின்பற்றிச் “செய்க பொருளை” என்று நெறிப்படுத்துகிறான். நாடு நலம் பெற நல்ல கல்விச்சாலைகள் தேவை; தொழிற்சாலைகள் தேவை.

நிதி முட்டுப்பாடு இருப்பின் இடத்துக்கு இடம் தட்டுப்பாடுண்டாகும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் முட்டுப்பாடுண்டாகும். செல்வம் உணவைப் போன்றது என்று கூறி ஒரு புதிய கொள்கையை உருவாக்கினான்.

அதாவது உண்ட உணவு செரிமானம் ஆவதைப் போல் ஈட்டிய செல்வமும் செலவழிக்கப் பெறுதல் வேண்டும். பணம் காத்த பூதமாகிவிடக் கூடாது.

நமது நாட்டில் செல்வர்கள் அதிகமில்லை. ஊருக்கு ஒருவர் இருந்தால் பெரிய காரியம். ஆயினும், அதைரியப்படிக் கூடாது. பொருள் செய்யும் முயற்சியைத் தொடங்கிவிட்டால் வளரும். பெருகி வளரும். இது பாரதியின் நம்பிக்கை.

இந்த முயற்சியில் பாரதி, மடாதிபதிகளையும் சம்பந்தப்படுத்துகிறான். மடாதிபதிகள் தங்களுடைய சிஷ்யர்களுக்கு ஆத்ம விசாரத்தில் பக்தி ஏற்படும்படி செய்ய வேண்டும்.

ஆத்ம விசாரத்திற்கு இரண்டு சத்ருக்கள் உண்டு. ஒன்று செல்வப் பெருக்கினால் உண்டாவது. அதாவது