பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 77

“தமிழில் - சொந்த மொழியில், சொந்த மூளையை கசக்கிப் பிழிந்து “பாஞ்சாலி சபதம்” என்ற புத்தகம் எழுதி இருக்கிறேன். அது நன்றாக இருக்கிறது என்று ஒருவனும் ஒரு கடிதமும் எனக்கு எழுதவில்லை” என்கிறான்.

தாய் மொழி தமிழில் எழுதிய நூல்களைத் தமிழ் நாட்டார் படித்துப் போற்றவில்லை என்று பாரதி மனம் நொந்தான்; வருந்தினான். இன்று வரையிலும் கூட இது நீடிக்கிறது.

பாரதி, கடவுள் நம்பிக்கை உடையவன். மதங்களில் நம்பிக்கை உடையவன். ஆயினும், பாரதி, இத்துறையில் தீவிரமாகச் சிந்தித்தான்; மாற்றங்களைக் காண விரும்பினான்.

பாரதி, கடவுள் வழிபாட்டுக் கொள்கையில் விவேகானந்தரை அப்படியே ஆதரிக்கிறான். விவேகானந்தர் “விடுதலையே என் மதம்” என்று கூறியவர். அவர் எழுதிய கடிதம் ஒன்றை எடுத்துத் தருகிறான்.

“முத்தி அல்லது விடுதலையே என் மதம்! இதை கட்டுப்படுத்த முயல்வது யாதாயினும் அதனை நான் போர் செய்தேனும், புறங்கொடுத்து ஒடியேனும் அகற்றிவிடுவேன்.

என் வேலை முடிந்து போய்விட்டது என்ற உணர்ச்சி உண்டாகிறது. மிஞ்சிவந்தால் நான் இன்னும் மூன்று. அல்லது நான்கு வருஷந்தான் உயிரோடிருப்பேன். அதற்கப்பால் என்ன நேரும் என்பதை நான் பொருட்டாக்கவில்லை.