பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்ஊக்கம் இல்லாதவர்களே சப்தம் போடுவார்கள்; இரைச்சல் செய்வார்கள். ஆழமில்லாத கடற்பகுதியே அலைகளால் ஆர்ப்பரிக்கும். ஆழ்கடல் மோனத் தவம் செய்து முத்தைக் கொழிக்கும்.

நல்ல முன்னேற்றம் நிறைந்த வாழ்க்கைக்குத் தங்களைத் தாங்களே ஆராய்ந்து நிறை - குறை கண்டு, திருத்தங்கள் காண்பது அவசியம். ஆனால், ஒருவழிப்படாத அசுத்தமான மனமுடையவர்கள் தமக்குத் தாமே விமர்சனம் செய்து கொள்ள ஒருப்படுவதில்லை.

மற்றவர்களுடைய விமர்சனத்தையும் ஏற்க மாட்டார்கள். மாறாக எரிச்சல் கொள்வார்கள். இத்தகையோர் சுகபோகங்களையே விரும்பி அலைபவர்கள்.

நல்ல நியதிகளுக்குக் கட்டுப்பட்ட தூய மனமுடையவர்கள் தாங்கள் தங்களுடைய மனத்தை எதிரெதிராய் பார்த்துப் பக்குவப்படுத்தி அந்த மனத்தை ஞானத்திற்கு அடிப்படையாக்கி நல்ல காரியங்களில் ஈடுபடுத்துகிறார்கள்.

விவேகியானவன் தன் சத்துருக்கள் தன்னை வைது திட்டினாலும் மெளனமாகவே இருப்பான். வாயினால் மட்டும் அல்ல. மனத்தினாலும் மெளனமே சாதிப்பான். ஏன்? அவரவர்களுடைய உணர்ச்சிகளுக்கு ஏற்ப, குணங்களும் செயற்பாடுகளும் அமையும். வருந்தி என்ன பயன்?

இதற்கு எடுத்துக்காட்டாக வால்ட் விம்மன் தனது கவிதைகளை இகழ்ந்தவர்களைப் பற்றி, “அவர்களுடைய சுபாவத்திற்கு அதுதான் சரி” என்று. சொன்னதை மேற்கோள் காட்டுகிறான் பாரதி.