உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இத்தகைய போலி விளம்பரப் போக்குகளை பார்வதி பி.ஏ.,யில் அண்ணா சித்தரிப்பதைப் பார்த்தால் வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டியதிருக்கிறது. விரசமில்லாமல் இத்தகு வேடிக்கை மனப்போக்குகளைச் சித்தரிப்பதில் அண்ணா வல்லவராக விளங்குகிறார்.

இனம், இனத்தைச் சாரும். போலி மனிதர்கள் போலி மனிதர்களையே சார்வார்கள். இது ஆச்சரியப்படத் தக்கதல்ல. இருவருக்கும் வியாபாரம் ‘புளுகு’ தானே ஒருவர் செல்வத்தோடு, ‘புளுகு’ வியாபாரம் செய்கிறார்: புகழ் வேட்டையாடுகிறார். .

இவர் அண்ணாவின் படைப்பாகிய ஆலாலசுந்தரர். பிறிதொருவர் ஆலால சுந்தரரின் வாரிசாகத் துடிக்கும். பார்த்திபன். ஆலாலசுந்தரர், பழைய மாதிரி மோசடிக்காரர்; பார்த்திபன் நவீன மாதிரி மோசடிக்காரர்.காரணம் இவர் ஒரு பத்திரிகை ஆசிரியரும் கூட. பத்திரிகை ஆசிரியர் மட்டுமா? சொற்பொழிவாளர்; கலா ரசிகர்; நவீன ஆயுதங்களைக் கையாளுபவர்.

இவர்களுக்கு பெங்களுர் அம்பக் ஆறுமுகத்தைப், போன்றவர்கள் தானே உறவாக முடியும் அம்பக் ஆறுமுகமோ வெறும் வாயால், படி படியாக அளப்பவர்; விளம்பரப் பிரியர்; ஆனால் கொஞ்சம் யோக்கியர்; பிறருக்கு விளம்பரம் செய்து தனக்கும் விளம்பரம் தேடுபவர். இவர்களின் கூட்டுறவை அண்ணா சிரிக்கச் சிரிக்கப் படைத்திருக்கிறார்.

அழகான உவமை ஒன்றும் எடுத்துக்காட்டுகிறார். “சேற்றிலே தானே தவளை இருக்கும் தவளைக்கும் சேறுதானே கிடைக்கும்! அது போலத்தான் அம்பக் ஆறுமுகத்துக்கு ஏற்ற ஆள்தான் பார்த்திபன். பார்த்திபனுக்கு ஏற்ற ஆள்தான் ஆறுமுகம்” என்று எழுதிச்