பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
96 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 

குபேர உலகத்தைச் சார்ந்த மனிதர்களைப் பார்த்து. அறிஞர் அண்ணா!

அரசியல் வானில் காரல்மார்க்ஸின் சிந்தனையும், வள்ளுவத்தின் சிந்தனையும் பிரஞ்சு புரட்சியும், சமதர்மச் சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கின்றன . இன்று எங்கும் அந்தப் பேச்சு செல்வச் சீமான்களும் சமரசம், சன்மார்க்கம், சமதர்மம் இவைபற்றி ஓயாது பேசுகின்றனர். இஃது உண்மையான ஆர்வமா? இல்லை என்றார் அறிஞர் அண்ணா.

சில சொற்களால் இதைக் கேலி செய்கிறார். “சீமானின் சமதர்மப் பிரச்சாரம் ஓய்வு நேர உல்லாசம்” என்கிறார். அதே நேரத்தில் ஏழைகளைப் பார்த்து எச்சரிக்கை செய்கிறார். அவர் எச்சரிக்கை சமதர்மம் ஒன்றே ஏழைகளின் வாழ்க்கைத் தோணி என்பதாகும்.

புதுதில்லியில் 1947 - ல் அண்ணல் காந்தியடிகள் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் சமூகத்தைப் பிடித்திருக்கின்ற ரோகத்தைப் பற்றிப் பேசினார். அதே கருத்தை அறிஞர் அண்ணா அவர்கள் லாவகமாக பிரதிபலிப் பதைப் பார்க்கிறோம். “செல்வம் சமூகத்தில் சிலரிடத்தே. குவிவது காசநோய் போன்றது. காசநோய் பரவிய உடல் இளைக்கத்தானே செய்யும்?” என்று வினாவை எழுப்புகிறார்.

அமரர் நேருஜி “எல்லோருக்கும் ஒரு வாக்கு” என்பதினாலேயே பூரண மக்களாட்சியும் சமதர்ம சமுதாயமும், சமூக ஒருமைப்பாடுடைய சமுதாயமும் அமைந்துவிடாது” என்று தெளிவாகக் கறியுள்ளார். அறிஞர் அண்ணாவும் இந்தக் கருத்தில் தெளிவாகவே இருக்கிறார்; உறுதியாகவும் இருக்கிறார்.

அதனால்தான் போலும் அவர் கட்சி, நிறைய. நன்கொடைகள் வாங்கவில்லை. “குடியரசு முறையையும்