பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 97
 

வைத்துக்கொண்டு சமூகத்திலேயும், தொழில் உலகிலேயும் ஆதிக்கக்காரர்களுக்குப் பிடி இருக்கும் படியும் அனுமதித்துவிட்டால் புத்தியுள்ள ஒரு மன்னனே கூட குடியரசுக் கோட்பாடு பேசும் அமைச்சர்களை ஆட்டிப் படைக்க முடியும்” என்று இரண்டுபட்ட கருத்துக்கு இடமின்றி “எல்லோரும் இந்நாட்டு, மன்னர்” என்ற நூலில் எழுதியுள்ளார்.

அறிஞர் அண்ணா கசப்பு மருந்தை கருப்பட்டியுடன் கலந்து கொடுப்பதைப் போல தனது சீர்திருத்தக் கருத்துக்களை நகைச்சுவையுடன் கலந்து படைத்துக் காட்டுகிறார். பெண்கள் முன்னேற்றத்தில் அறிஞர் அண்ணாவுக்குத் தனி ஈடுபாடு உண்டு.

‘ரோமாபுரி ராணிகள்’ என்ற அறிஞர் அண்ணாவின் படைப்பு விரச உணர்ச்சிகள் நிறைந்தது என்ற கருத்து உண்டு. அது உண்மையும் கூட. ஒரு எதார்த்த: நிலைமையை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படும் பொழுது எழுத்தாளன் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறான்.

அறிஞர் அண்ணாவின் நிலைமையும் இதுவே என்று கருதுகிறோம். ஆயினும் தனது படைப்புத் திறனில் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளார். இந்த வித்தியாசத்தை “ரோமாபுரி ராணி”யைப் படிப்பவர்களும் “பார்வதி பி.ஏ.”யைப் படிப்பவர்களும் தெளிவாக உணர முடியும்.

முன்னையதைப் படைக்கும் காலத்தில் அவர், தீமையை மட்டும் கண்டு தீமையை மட்டும் விமர்சித்து அழிக்கும் முகாமில் இருந்தார். பின்னர் அவர் தீமையை அழிப்பதோடின்றி நன்மையை உருவாக்க வேண்டுமென்ற கருத்தில் ஈடுபட்டார்.