பக்கம்:சமுதாய வீதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 00 சமுதாய வீதி

'உன்னைச் சொல்லியும் குத்தமில்லை. அந்த ராஸ் கலையே கேக்கணும். நடிப்பும், பாட்டும், அழகும், லட்சுமிகரமான கலைகள். அந்தக் கலைகளை ஆளும் கைகளை எச்சில் தூக்கும்படி விட்டாயே, நீ நாசமாய்ப் போயிடுவேடான்னு கோபால் கிட்டவே சொல்றேனா இல்லையா பாரேன்...'

-என்று முத்துக்குமரன் ஆவேசமாகக் கத்துவதற்குத் தொடங்கிய போது, அவளுடைய மெல்லிய பொன் விரல் அவன் வாயைப் பொத்தின.

தயவு செய்து வேண்டாம்! எனக்குப் பெருமை தேடித்தர முயன்று, அந்த முயற்சியால் நீங்கள் உங்கள் பெருமையை இழந்துவிடக் கூடாது.'

இலேசாக அழுகை விசும்பும் குரலில் இவ்வாறு வேண்டினாள் அவள். மீண்டும் கண்கலங்கி நிற்கும். அவளுடைய எழில் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.

8.

மாதவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவளைப் பற்றிக் கோபாலிடம் விசாரிக்காமலே விட்டு விட்டான் முத்துக்குமரன்.

"மாதவியை நீ சாப்பாடு பரிமாறக் கட்டளை யிடுவது, எச்சிற்கையைக் கழுவுவதற்குத் தண்ணீர் ஏந்தி வரச் செய்வது போன்ற காரியங்கள் எனக்குப் பிடிக்க வில்லை. அவை உன் திமின்ரக் காட்டுகின்றன என்று கோபாலிடம் கண்டித்துப் பேச வேண்டும் என்று நினைத் திருந்த முத்துக்குமரன்-மாதவியின் வேண்டுகோளுக் காகவே அந்த நினைவைக் கைவிட வேண்டியதாயிற்று.

'அவ்ரோடு ரொம்ப நாளாகப் பழகிக் கொண்டிருக் கிற என்னிடம் அவர் மரியாதையாக நடந்து கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/102&oldid=560898" இலிருந்து மீள்விக்கப்பட்டது