பக்கம்:சமுதாய வீதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1 2 சமுதாய வீதி

"ஜில் ஜில்லைவிட உன்னுடைய பாண்டிபஜார் ஆள் -முத்துக்குமரன் கொடுத்த பதில் கோபாலைச் சவுக்கடியாக விளாசி விட்டிருந்தது, சிறிது நேரத்துக்குப் பின் சுபாவமாக ஒன்றுமே நடைபெறாதது போலக் கோபாலைப் பார்த்து, 'நாளையிலிருந்து நாடகத்துக்கு ரிஹர்சல் இங்கே இந்த அவுட் ஹவுசிலே நடக்கும்...நீயும் வந்து சேர்'-என்று கட்டளையிட்டான் முத்துக் குமரன். அதையும் கோ பால் மறுத்துச் சொல்ல முடியவில்லை.

9

'இன்னிக்கு உனக்குப் பணம், பவிஷ எல்லாம் வந்திட்டதுனாலே நாடகம்னா என்னன்னு நீ கரை கண்டு விட்டதாக நான் ஒப்புக்கொண்டு விடமாட்டேன். நாடகம்னா என்னன்னு எனக்குத் தெரியும். அதைக் கேட்டு அதன்படி நடக்கிறதைவிட வேறே எதையும் நீ செய்ய வேண்டியதில்லை. திடீர்னு உன்னை நீ ரொம்பப் பெரிய புத்திசாலியா நினைச்சுக்க வேண்டிய அவசிய மில்லே' -என்றெல்லாம் கோபாலைக் கண்டிக்க நினைத் திருந்தும் மாதவியின் முன் அதைச் செய்து கோபாலின் மானத்தை வாங்க விரும்பவில்லை அவன்,

-வெளியேறும்போது நாடகப் பிரதி ஒன்றையும் கையிலெடுத்துக்கொண்டு வெளியேறிய கோ பா ைல இந்தா அதை எங்கே நீ கொண்டு போறே? இப்படிக் கொடுத்திட்டுப் போ'- என்று உரத்த குரலில் அதட்டி வாங்கி வைத்துக் கொண்டான் முத்துக்குமரன். அந்த அதட்டலையும் மீற முடியாமல் கோபால் கட்டுப் பட்டான்.

இருவருடைய இந்த நிலைகளுக்கு நடுவ்ே தான் நின்று காண விரும்பாமல் மாதவி வீட்டுக்குப் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/114&oldid=560911" இலிருந்து மீள்விக்கப்பட்டது